வரலாற்றில் முதன்முறை!! ஆண்கள் பிரிவை வழி நடத்தும் பெண் கமாண்டன்ட்! ஒரிஜினல் சிங்கப்பெண்!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆண்கள் பிரிவை, முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் தலைமையேற்று நடத்தி உள்ளார்.
இந்தியாவின் 77வது குடியரசு தின விழாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வு இன்று (ஜனவரி 26, 2026) டெல்லி கடமைப் பாதையில் அரங்கேறியுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) ஆண்கள் அணிவகுப்பை முதல் முறையாக ஒரு பெண் அதிகாரி தலைமையேற்று நடத்தியுள்ளார். இந்த அரிய சாதனை நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா கிராமத்தைச் சேர்ந்த சிம்ரன் பாலா (26) என்ற இளம் அதிகாரி இந்த வரலாற்று நிகழ்வுக்கு மையமாக உள்ளார். 2023-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்ட் பதவியில் சேர்ந்த சிம்ரன், குறுகிய காலத்திலேயே தனது திறமை, தைரியம், தலைமைத்துவத்தால் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தார். இன்றைய அணிவகுப்பில் 140 வீரர்கள் கொண்ட சிஆர்பிஎஃப் ஆண்கள் பிரிவை அவர் முழு கம்பீரத்துடன் வழிநடத்தி வருகிறார்.
பெண்கள் பாதுகாப்புப் படைகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், சிம்ரன் பாலாவின் இந்த தலைமைத்துவம் பெண்களின் திறனுக்கு ஒரு பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. சிஆர்பிஎஃப் போன்ற ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் படையில் ஒரு பெண் அதிகாரி அணிவகுப்பை வழிநடத்துவது முதல் முறை என்பதால், இந்த நிகழ்வு வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையில் பறந்தது மூவர்ணக்கொடி!! தேசியக் கொடி ஏற்றினார் திரவுபதி முர்மு!! மலர் தூவியது ஹெலிகாப்டர்!
பெண்கள் பாதுகாப்புப் படைகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், சிம்ரன் பாலாவின் இந்த தலைமைத்துவம் பெண்களின் திறனுக்கு ஒரு பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. சிஆர்பிஎஃப் போன்ற ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் படையில் ஒரு பெண் அதிகாரி அணிவகுப்பை வழிநடத்துவது முதல் முறை என்பதால், இந்த நிகழ்வு வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் விலங்கு-பறவை படை, 30 கலாசார ஊர்திகள், 29 விமான சாகசங்கள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்ட பல சிறப்புகள் இருந்தாலும், சிம்ரன் பாலாவின் தலைமைத்துவம் இன்றைய விழாவின் மிகப்பெரிய சிறப்பம்சமாக விளங்குகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்திய ராணுவம் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது.
இதையும் படிங்க: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!! டெல்லியில் துவங்கியது கோலாகல குடியரசு திருநாள்!!