அழுது கொண்டே HIT ஆர்டர் போட்ட கஸ்டமர்... டெலிவரி பாய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்...!
மனவேதனையில் எலி மருந்து ஆர்டர் போட்ட கஷ்டமருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்த டெலிவரி பாய் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஆனால் மன வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு சிலர் முடிவுகளை எடுக்கின்றனர். உயிரை மாய்த்துக்கொள்ள பலவிதங்களை கையாளுகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் ஆர்டரில் எலி மருந்தை கஸ்டமர் ஒருவர் ஆர்டர் செய்ததாக தெரிகிறது. அன் டைமில் அழுது கொண்டே எலி மருந்து ஆர்டர் செய்த கஷ்டமருக்கு ஆறுதல் கூறி அனுப்பிய டெலிவரி பாயின் செயல் நெகிழ வைத்துள்ளது.
நடந்த சம்பவம் குறித்து டெலிவரி பாய் வெளியீட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் இரவு நேரத்தில் மூன்று எலி மருந்துகளை ஆர்டர் போட்டதாக அவர் கூறியுள்ளார். எலி மருந்து ஆர்டரை எடுத்துக்கொண்டு சென்றபோது ஏதோ மன வேதனையில் தான் இதனை அவர் ஆர்டர் செய்துள்ளார் என்பதை அறிந்ததாக தெரிவித்தார்.
அப்போது லொகேஷன் எனக்கு சென்று ஆர்டர் மிஸ் ஆகிவிட்டதாக அந்த பெண்ணிடம் கூறியதாக தெரிவித்தார். அப்போது அழுது கொண்டே அந்தப் பெண் சரி என கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார். அவரை அணுகி தவறான முடிவுக்காக தானே எலி மருந்து ஆர்டர் செய்தீர்கள் என்று கேட்டதாகவும் எலி பிரச்சனை என்றால் 7:00 மணிக்கு முன்னதாகவோ அல்லது மறுநாளோ கூட நீங்கள் ஆர்டர் செய்திருக்கலாம்., ஆனால் இப்படி அன் டைமில் ஆர்டர் போட்டு இருக்கிறீர்கள் என்றும் தனக்கு உங்கள் சூழ்நிலை புரிகிறது என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இடுப்பில் பாய்ந்த குண்டு... துடிதுடித்து பறிபோன உயிர்... பதற வைக்கும் சிசிடிவி காட்சி...!
பிறகு அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு எலிமருந்தை திருப்பி எடுத்துச் சென்றதாக அந்த டெலிவரி பாய் கூறிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. எதையோ சாதித்தது போல தனக்கு இருப்பதாகவும் அந்த வீடியோவில் அவர் மிகவும் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உலகம் அழியதான் போகுது... ஆனா கடவுள் POSTPONED பண்ணிட்டாரு... அந்தர் பல்டி அடித்த தீர்க்கதரிசி..!