விடிந்ததுமே இப்படியா? ... கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரில் எதிர்பாரா மாற்றம்...!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வரும் சூழலில், இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 6,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கபினி அணையிலிருந்து கடந்த சனிக்கிழமை 27,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த உபரி நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த திங்கட்கிழமை ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் வரத் தொடங்கி, 20,000 கனஅடி வரை அதிகரித்தது.
இந்த நிலையில், தொடர்ந்து மூன்று நாட்களாக நீர்வரத்து நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நிலவரப்படி வினாடிக்கு 9,500 கனஅடியாக குறைந்தது.
இதையும் படிங்க: மீண்டும் சூடுபிடித்த காவிரி விவகாரம்..!! கர்நாடகாவில் 'ஜனநாயகன்' போஸ்டர் கிழிப்பு..!!
அதனைத் தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி மீண்டும் 6,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6,000 கனஅடியாகக் குறைந்திருக்கிறது. நீர்வரத்து சரிந்திருப்பதால் பரிசல் இயக்குவதற்கான தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரி செய்யவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பழனி விவகாரத்தில் திடுக்கிடும் பூகம்பம்... கைதான முக்கிய நபர் சிறையிலேயே திடீர் மரணம்...!