#BREAKING: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 2) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தொடர் கனமழை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை மற்றும் வானிலை எச்சரிக்கையின் காரணமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் தொடரும் கனமழை.. மாலையில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் வலுவிழந்த 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நீடிப்பதால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வானிலைக் கவலைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை (02.12.2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் தொடரும் கனமழை மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்புடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்கு அனுமதி - குளங்கள், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!