×
 

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன்... மரக்கட்டையால் தாக்கப்பட்ட கொடூரம்..!

கோவையில் ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை மரக்கட்டையால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓரினச் சேர்க்கை என்பது ஒரு தனிநபரின் இயல்பான பாலியல் நாட்டம் தொடர்பானது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் IPC பிரிவு 377-ஐ பகுதியளவு நீக்கியதன் மூலம், ஒருமித்த பாலியல் உறவுகளை குற்றமற்றதாக்கியது. இந்தத் தீர்ப்பு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சமூக மற்றும் சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கியது. இருப்பினும், தமிழகத்தில் மாணவர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளன.

மாணவர்கள் இத்தகைய கட்டாயப்படுத்துதலுக்கு உள்ளாகும்போது, அவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகள், மன அழுத்தம், பயம், மற்றும் சுயமரியாதை இழப்பு ஏற்படுகிறது. இது அவர்களின் கல்வி, சமூக உறவுகள் மற்றும் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. குற்றவாளிகள் மாணவர்களை மிரட்டுவதற்கு வீடியோ பதிவு, அவமானப்படுத்துதல் அல்லது உடல் ரீதியான வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். முறையான விழிப்புணர்வு இல்லாததே பல குற்றங்களுக்கு காரணமாக உள்ளது.

இந்த நிலையில், கோவையில் ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை மரக்கட்டையால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பள்ளி முடிந்து வீடு திரும்பி உள்ளார். அப்போது வசந்தகுமார் என்பவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். இதனை அடுத்து மாணவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஓரினச்சேர்க்கைக்கு சிறுவன் மறுத்த நிலையில் அவரை மரக்கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து வசந்தகுமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி, மற்றும் போட்டோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி தாக்கிய வசந்தகுமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வேறு ஏதேனும் மாணவர்களிடம் இது போல அவர் நடந்து கொண்டுள்ளாரா என்று கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: காதல் மனைவிக்கு டார்ச்சர்... பிரபல யூடியூபர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு!!

இதையும் படிங்க: பேராசிரியரின் குரூர புத்தி! தட்டி கேட்காத கல்லூரி.. தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share