×
 
☰

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

சேத்துப்பட்டு தனியார் விடுதியில் 14 வயது மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்? வார்டன் போக்சோவில் கைது

சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஹாஸ்டலில் தங்கி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மாணவன், காலாண்டு விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

விடுமுறை முடிந்த பின்னரும் மாணவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பெற்றோர் மாணவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவன் அழுதபடி இருந்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் கவனித்துள்ளனர்.

இதையும் படிங்க: அவசர அவசரமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘போக்சோ கைதி’... ஒரு வாரத்திற்குப் பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

இதையடுத்து, மாணவனை வேலூர் தொகுதி தவெக எம்எல்ஏ வினோத் கண்ணனிடம் அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து, அவர் இதுகுறித்து சைல்டு லைன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஹாஸ்டலில் வார்டனாக பணியாற்றி வரும் இம்மானுவேல் என்பவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2 மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் 4 முறை நடந்ததாகவும் மாணவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மாணவன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வார்டனான சந்தவாசல் பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் (25), என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவு சேத்துப்பட்டு போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவன் கடந்த ஜூலை மாதத்தில் சக மாணவனுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டதாகவும், இதுதொடர்பாக வார்டனிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவன் நிர்வாகத்திடம் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாகவும், பின்னர் சொந்த ஊருக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, மீண்டும் ஊருக்கு வந்து, “உன்னை என்ன செய்கிறேன் பார்” என வார்டனை மாணவன் மிரட்டிவிட்டு சென்றதாகவும், அதனைத் தொடர்ந்து தற்போது கூறப்படும் சம்பவம் நடைபெற்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மாணவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, வார்டன் இம்மானுவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற

இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்... சிக்கிய முக்கிய காவலர்கள்... வெளியானது பகீர் பின்னணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share