×
 

குளியலறையில் ரகசிய கேமரா... நள்ளிரவில் நடுரோட்டில் குவிந்த 2000 பெண்களால் பரபரப்பு...!

ஓசூர் அருகே டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் விடுதி முன் 60 பேர் மட்டும் விடிய விடிய தர்ணா போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே ஐ போன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் டாட்டா நிறுவனம் செயல்பட்டு வருகிறது, தொழிற்சாலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்

இங்கு பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்கு நாகமங்கலம் என்ற பகுதியில் அடுக்குமாடி விடுதிகள் கட்டப்பட்டுள்ளது உள்ளது,விடுதியில் சுமார் 7000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வருகின்றனர்

இந்த நிலையில் கடந்து இரு தினங்களுக்கு முன்பாக எட்டாவது மாடியில் உள்ள நான்கு பேர் தங்கி உள்ள விடுதி அறையில் 

இதையும் படிங்க: நெருங்கியது பீகார் சட்டசபை தேர்தல்..!! முதற்கட்டமாக 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு..!!

குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதைப் பார்த்த மற்ற தொழிலாளர்கள் ஒருவருக்குள் ஒருவர் தகவலை பரிமாறி உள்ளனர் மேலும் விடுதி மேலாளருக்கும் தெரிய வரவே விசாரணை மேற்கொண்டதில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலா குமாரி வயது 23 என தெரிய வந்தது

இதை அடுத்து பெண் தொழிலாளர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கேமரா வைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்,பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இரவு முழுவதும் நீடித்தது.

அதிகாலை 4 மணி அளவில் கலைந்து விடுதிக்குள் சென்றனர் ஆனால் 60 பேர் மட்டும் விடுதி வார்டன் மீது புகார் வைத்து அவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்

பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர் இச்சம்பவம் விடுதி பகுதியில் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

இதையும் படிங்க: அமெரிக்காவில் அதிர்ச்சி: தரையில் விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்..!! விமானிகளின் கதி என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share