#BREAKING ஓசூரில் பரபரப்பு... தவாக நிர்வாகி ஓட, ஓட வெட்டிக்கொலை... திடுக்கிடும் பின்னணி...!
ஒசூர் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று செங்கல்பட்டு பாமக மத்திய மாவட்ட துணை செயலாளரும், காட்டங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மனுமான இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஏ.வாசு. என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் ஓட, ஓட வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில், தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிளமங்கலம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருந்து வந்தவர் ரவிசங்கர். இவரை அஞ்சாளம் கிராமத்தில் வைத்து அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் ஓட, ஓட வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த தாக்குதலின் போது, அவரது வலது கையின் மூன்று விரல்கள் தனியாக துண்டாகி இருக்கிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அவசர, அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர் பன்றிகளை வளர்த்து விற்கும் தொழிலை செய்து வந்திருக்கிறார். இதனால் இவர் தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டியின் காரணமாக ஒரு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தற்போது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தொடர்ந்து கொலை செய்தவர்கள் யார் கொலைக்கான முழு காரணம் என்ன என்பதையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சீமானுக்கு அவ்வளவுதான் லிமிட்... நடவடிக்கை எடுங்க! தவெகவினர் போலீசில் புகார்
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் விஜய்யும் வடிவேலு ஒண்ணு தான்... தவெகவை எச்சரித்த அமைச்சர் ரகுபதி...!