அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!
சைதாப்பேட்டை சுப்புபிள்ளை தோட்டத்தில் சாதி ரீதியாக வீடு ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சைதாப்பேட்டையில சுப்புப்பிள்ளை தோட்டம் திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கப்பட்ட சம்பவத்தில் சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர். தவெக எம்.எல்.ஏ. தலையீடு காரணமாக சாதி ரீதியாக வீடு ஒதுக்கப்பட்டதாக கூறி சிலர் போராட்டத்திலும், அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சாதி பாகுபாடோடு வீடுகள் ஒதுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது. சென்னை சுப்புபிள்ளை தோட்டம் பகுதியில் திட்டப்பகுதி ஒன்றில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீட்டில சாதிவாரியாக பாகுபாடு காட்டப்படுவதாக சில ஊடகங்களில்செய்திகள் வெளியான செய்திகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது.
வீடு ஒதுக்கீடுள் அனைத்தும் எவ்வித முறைகேடும் இன்றி வாரியத்தின் உடைய நிலையான இயக்க முறையை அதாவது எஸ்ஓபி பின்பற்றி, குழுக்கள் முறையில் வெளிப்படையாக நடத்தப்பட்டது என வாரித்தின் நிர்வாக பொறியாளர் விளக்கம் அளித்திருக்கிறார். சுப்பிள்ளை தோட்டம் திட்டப்பகுதியில் மொத்தம் நான்கு பிளாக்குகள் ஏ, பி,சி,டி என 426 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் ஏற்கனவே வசித்து வந்த 210 குடியிருப்புகள் மற்றும் 159 ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 369 பயனாளிகளுக்கான இந்த வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: கோவா காங்கிரஸ் தலைமை மாற்றம்: புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் பொறுப்பேற்பு..!!
முதற்கட்டமாக மார்ச் 9ம் தேதி அன்று காவல்துறை அனுமதியுடன் குழுக்கள் நடத்தப்பட்டு 47 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. பின்னர் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட குழுக்கள் முறையானது மேலாண்மை இயக்குனருடைய அறிவுறுத்தலின் படி கடந்த 14.5.2026 மற்றும் 15.5.2026 ஆகிய தேதிகள் மீண்டும் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டது.
மொத்தமாக இருந்த 369 பயனாளிகளின் இதுவரை 335 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவினருக்கும் 15 வீடுகள் என மொத்தம் 350 குடியிருப்புகள் குழுக்கள் முறையில் வாரியத்தினுடைய விதிகளின் படி எவ்வித சாதி பாகுபாடும் இன்றி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 34 பயனாளிகள் இதுவரை குழுக்களில் பங்கு பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதையும் நிரூபிக்கிற வகையில் தற்பொழுது ஒதுக்கீடு பெற்றுள்ள 350 பயனாளிகளுடைய சமூகவாரியான பட்டியல் விவரங்களையும் வாரியம் வெளியிட்டிருக்கிறது. வாரியம் வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ பட்டியலின் படி அனைத்து பிளாக்குகளுமே அனைத்து சமூகத்தை சார்ந்த மக்களும் கலந்து குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை வாயிலாக வாரியம் உறுதிபட தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: “நீதிக்கான முக்கிய முன்னேற்றம்”..! சுர்ஜித் தாய் அதிரடி ARREST..!! திருமாவளவன் பாராட்டு..!!