×
 

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டோம்... விநாயகர் மீது உறுதிமொழி... ஹெச்.ராஜா அதிரடி...!

இந்திய பொருட்களையே வாங்குவோம் என விநாயகர் மீது உறுதிமொழி எடுக்க வேண்டும் என எச்.ராஜா வேண்டுகோள்

மதுரை மாவட்டம் மேலூரில், அகில பாரத இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களின் துள்ளலாட்டம் என பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது.

மேலூரில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மேலூர் சிவன் கோவில் முன்பு இன்று எடுத்து வரப்பட்டு அங்கிருந்து சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களின் துள்ளலாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்தது சிதற பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

பெரிய கடை வீதி சந்தைப்பேட்டை பெரிய பள்ளிவாசல் பேருந்து நிலையம் வழியாக மண் கட்டி தெப்பக்குளத்தை ஊர்வலம் வந்தடைந்ததை தொடர்ந்து, தெப்பக்குளத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.

இதையும் படிங்க: “விஜய்க்கு இந்துக்கள் ஓட்டுத் தேவையில்லை” - தவெகவிற்கு ஷாக் கொடுத்த ஹெச்.ராஜா...! 

இதேபோன்று கொட்டாம்பட்டியில் இந்து முண்ணனி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை துவக்கி வைத்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா, இந்திய பொருளாதாரம் உயர அனைவரும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டோம் என விநாயகர் மீது உறுதிமொழி எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா,பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் 24 லட்சம் பேர் இறந்து விட்டதாக தேர்தல் ஆணையமே தெரிவித்துவிட்ட நிலையில் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.

மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தையடுத்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

 

 

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு முதல்ல ஆபீஸ் கொடுங்கப்பா... பாஜகவின் சிங்கத்தை பங்கமாய் கலாய்த்த காங்கிரஸ் எம்.பி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share