த.வா.க. நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்... பிரபல கூலிப்படை தலைவன், பாமக நிர்வாகி சரண்...!
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம் 11 பேர் நீதிமன்றத்தில் சரண்
மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி மணிமாறன் கொலை வழக்கில் தொடர்புடைய 11 நபர்கள்இருவேறு காவல் நிலையங்களில் சரணடைத்துள்ளனர்.
பாமக காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தேவமணியின் மகன் பிரபாகரன் அக்கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன் (காரைக்கால் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொறுப்பாளர்) கடந்த வெள்ளிக்கிழமை மயிலாடுதுறையில் நடைபெற்ற த.வா.க கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, காரைக்கால் நோக்கி சென்ற போது செம்பனார்கோவில் பகுதியில் இரண்டு கார்களில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்களால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சாலை ஓரங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பாண்டிச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் நிலையத்தில் தேவமணியின் மகனும், தற்போதைய, பாமக மாவட்ட செயலாளருமான பிரபாகரன்(29), அவரது நண்பர்கள் குணசேகரன்(23) முருகன்(23) மற்றும் வீரமணி (45) ஆகிய நான்கு பேர் சரண் அடைந்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: த.வா.க நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை... தலையை சிதைத்து பழிதீர்த்த மர்ம கும்பல்!
மேலும், விழுப்புரம் அடுத்த வளவனூர் காவல் நிலையத்தில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த கூலிப்படை தலைவன் சுத்திமணி என்கிற மணிகண்டன்(36), சரவணன்(33), சுகன்ராஜ்(29). சரவணன்(28), அஜய்(22). முகிலன்(23), விஜயசங்கர்(30) ஆகிய 7 பேர் சரணடைந்தனர். இதையடுத்து, சரண் அடைந்த அனைவரும் செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 11 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள்.
கொலை நடந்த மூன்று தினங்களுக்குள் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!