கோவையில் பகீர்! இரண்டு விரல்கள் வெட்டப்பட்டு துண்டாக கிடந்த மனித கை... தனியார் நிறுவனத்தில் பரபரப்பு..!
கம்பெனியின் ஸ்டோர் ரூம் அருகே துண்டாக ஒரு கை கிடப்பதாக தகவல் தெரிவித்திருக்கின்றார்.
கோவை காளப்பாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் கம்பெனி ஒன்றை நடத்துகிறார்.
இந்த கம்பனியின் மேனேஜராக வேலை செய்யும் வைரவநாதன் என்பவர் சுகாகரிடம் வந்து கம்பெனியின் ஸ்டோர் ரூம் அருகே துண்டாக ஒரு கை கிடப்பதாக தகவல் தெரிவித்திருக்கின்றார்.
பிறகு சுதாகர் சம்பவ இடத்திற்கு அருகே சென்று பார்த்த போது துண்டாக வலது கை கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் விசாரித்த போது இங்கு இருக்கும் நாய் எங்கிருந்தோ அந்த கையை தூக்கி வந்து போட்டிருக்கலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிறகு சுதாகர் சூலூர் காவல் நிலையத்தில் தந்த புகாரின் அடிப்படையில் 194 BNSS சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்கள், மேனேஜர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அருகில் ஏதாவது இடுகாடு இருக்கிறதா? அங்கிருந்து சரியாக புதைக்கப்படாத சடலத்தில் இருந்த கையை நாய் கவ்விக் கொண்டு வந்திருக்குமா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?
அதேபோல் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வரும் போலீசார், எந்த நாய் இந்த கையைக் தனியார் நிறுவனத்திற்குள் கொண்டு வந்து போட்டிருக்கும், அதன் உரிமையாளர் யார் என்ற கோணத்திலும் தொழிலாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!