ரயில் மோதி கணவன் - மனைவி உயிரிழப்பு... தற்கொலையா? விபத்தா?... போலீஸ் கையில் சிக்கிய முக்கிய ஆதாரம்...!
போளூர் அருகே ரயில் மோதி தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போளூர் அருகே ரயில் மோதி கணவன் மனைவி உயிரிழந்த சம்பவத்தில், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வடமாதிமங்கலம் ரயில் நிலையம் பகுதியில் இன்று அதிகாலை ரயிலில் மோதி கணவன்-மனைவி உயிரிழந்தனர். சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் களம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் களம்பூர் போலீசார் மற்றும் காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டனர்.
உயிரிழந்தவர்கள் திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான சந்திரகுமார் மற்றும் அவரது மனைவி 38 வயதான சிந்து என்பது போலீஸ் விசாரணை மூலம் தெரியவந்தது. சந்திரகுமார், சிந்து இருவரும், அதிகாலை 4 மணி அளவில் நஸ்ராபூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த ரயில் எண் 17291 முன் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கழுத்தை நெறித்த கறவை மாட்டுக் கடன்... விவசாயி தூக்கிட்டு தற்கொலை...!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சந்திரகுமார் நீண்ட நாட்களாக நுரையீரல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், இருவரும் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகத நிலையில், உயிரிழப்புக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சித்ரா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் நேற்று வேலூருக்கு சிகிச்சைக்காக சென்ற தம்பதியினர் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று தொடங்கவிருந்த வகுப்புகள்... தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... !