“ஐ.பெரியசாமி வாழ்க” - அமலாக்கத்துறை ரெய்டுக்கு எதிர்ப்பு... தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகரால் பரபரப்பு...!
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு ஏற்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆக ஐ.பெரியசாமி இருந்து வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது இவரது வீட்டில் காலை 7:30 மணி முதல் 4 அமலாக்கத் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 8 CRPF போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 9 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டின் முன்பாக ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கைதாகிறாரா அமைச்சர் ஐ.பெரியசாமி? - சிக்கியது முக்கிய ஆவணங்கள்?... 3 மணி நேரம் அதிரடி விசாரணை...!
இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னாளபட்டியை சேர்ந்த சரவணன் என்ற தொண்டர் அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டின் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி அமைச்சர் ஐ பெரியசாமி வாழ்க என கோஷமிட்டவாரு தீக்குளிக்க முயன்றார்.
அப்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் உடனடியாக அவர் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர் இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்தத் தகவல் அறிந்த அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டிலிருந்து வெளியே வந்து தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் எடுத்துச் சென்றார்.
இதையும் படிங்க: காலையிலேயே பரபரப்பு; அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...!