தமிழ்நாட்டில் தினம் ஒரு நிர்பயா சம்பவம்... அதிமுக இன்பதுரை பார்லிமென்டில் ஆவேசம்..!!
தமிழ்நாட்டில் தினம் ஒரு நிர்பயா சம்பவம் நடப்பதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை குற்றம் சாட்டினார்.
விளாத்திகுளம் அருகே பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் அண்மைக்காலமாக சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
தூத்துக்குடி, மதுராந்தகம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்கள் அரங்கேறி வருவதால், மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு முற்றிலும் பறிபோயுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை இந்தப் பிரச்சினை குறித்து தேசிய மகளிர் ஆணையத்திடம் அவசரப் புகார் அளித்துள்ளார்.
அவரது புகார் மனுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து விட்டதாகவும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி, மதுராந்தகம், கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் அண்மையில் நடந்த சம்பவங்களை எடுத்துக்காட்டிய இன்பதுரை, இத்தகைய குற்றங்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பேசிய இன்ப துரை, தமிழகத்தில் தினம் ஒரு நிர்பயா சம்பவம் நடப்பதாக குற்றம் சாட்டினார். எனவே மணிப்பூருக்கு ஒரு குழு அனுப்பியது போல தமிழ்நாட்டிற்கும் ஒரு குழு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை சார்ந்தது அல்ல என்று விளக்கமளித்த இன்ப துரை, பெண்களின் மாண்பு சம்பந்தப்பட்டது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நேற்று ஏன் வரல? குற்றவாளிகள் எங்கே? கனிமொழியிடம் கிராம மக்கள் ஆவேசம்..!