×
 
☰

திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

திமுகவின் B டீம் தான் தமிழக வெற்றி கழகம் என்று அதிமுக எம் பி இன்பதுரை தெரிவித்தார்.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் சட்டத்துறைச் செயலாளருமான இன்பதுரை, தமிழக வெற்றிக் கழகம் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுகவின் வெற்றியைத் தடுக்கும் நோக்கத்துடன் திமுகவால் உருவாக்கப்பட்ட கட்சிதான் தவெக என்றும், அது திமுகவின் பி டீம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுகவை வீழ்த்துவதற்காகவே இந்தக் கட்சி உருவாக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.

அதனால்தான் சட்டமன்றத்தில் கருணாநிதி பெயர் சொன்னதும் முதல்வருக்கு கோபம் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளைக் குறிப்பிட்டு விமர்சித்தார். அதிமுகவின் தொண்டர்களில் தொண்ணூறு சதவீதத்தினர் தவெகவில் இணைந்துவிடுவார்கள் என ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்றார்.

தேர்தலில் தவெகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்றும், பல தொகுதிகளில் மூன்றாவது இடத்தையே பெற்றதாகவும் அவர் நினைவூட்டினார். அதனால் தான் அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை இழுக்கும் வேலையைத் தவெக செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.தேர்தலுக்கு முன்பு தவெக தன்னைத் தூய சக்தியாகவும், திமுகவைத் தீய சக்தியாகவும் சித்தரித்து வந்ததை நினைவுபடுத்திய இன்பதுரை, ஆட்சியமைக்கப் போதிய எண்ணிக்கை இல்லாததால் அவர்கள் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்ததை விமர்சித்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.! இதுதான் காவல்துறை லட்சணமா.? EPS காட்டம்..!

திமுகவை வீழ்த்துவது இரு கட்சிகளின் பொது நோக்கமாக இருந்தபோதும், தவெக அதிமுகவை நோக்கித் திரும்பாமல் அதிமுக உறுப்பினர்களை இழுப்பதைத் தேர்வு செய்ததாக அவர் கூறினார். அதிமுகவை அழிப்பதற்காகவே தவெக உருவாக்கப்பட்டது எனத் தேர்தல் பிரசாரத்திலேயே தான் கூறியிருந்ததாகவும், அதைத்தான் இப்போது அவர்கள் செயல்படுத்தி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: திமுக தயவில் தவெக ஆட்சி... எம்.எல்.ஏ.க்களுக்கு கைமாறிய ரூ.50 கோடி... திண்டுக்கல் சீனிவாசன் பகீர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share