×
 
☰

பழங்குடியின மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! என்ன தெரியுமா..??

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அறிவித்த இந்தத் திட்டம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை ஆதிதிராவிட மாணவர்களுக்கு இணையான அளவுக்கு உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ‘பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.4 கோடியே 31 லட்சத்து 83 ஆயிரம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் சுமார் 59,498 மாணவர்கள் பயனடைவார்கள்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தாலும், இரு பிரிவினருக்கும் இடையே தொகை வேறுபாடு இருந்தது. ஒரே கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களிடையே இந்த ஏற்றத்தாழ்வு நீக்கப்படும் என சமூக நீதித்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. அதன்படி, கூடுதல் செலவினத்தை மாநில அரசே முழுமையாக ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அறிவித்த இந்தத் திட்டம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

போஸ்ட் மெட்ரிக் (11-ம் வகுப்பு முதல் உயர்கல்வி, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி) பயிலும் 35,078 பழங்குடியின மாணவர்களின் உதவித்தொகை வேறுபாட்டை சரிசெய்ய ரூ.2 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரி மெட்ரிக் (10-ம் வகுப்புக்கு முந்தைய கல்வி) பயின்று விடுதியில் தங்காத 24,417 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 22 லட்சத்து 8 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும்.

இதையும் படிங்க: அண்ணன் சீர் திட்டத்திற்கு ஆதார் கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு!

மருத்துவக் கல்வி பயிலும் மூன்று பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வழங்கி வரும் நிலையில், கூடுதல் மருத்துவக் கட்டணத்திற்காக ரூ.55 லட்சத்து 20 ஆயிரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் தொழில்முறைப் படிப்புகளில் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து, சம வாய்ப்பை உறுதி செய்யும் என அரசு தெரிவித்துள்ளது. சமூக நீதியை மேம்படுத்தும் இந்த முயற்சி, பின்தங்கிய சமூக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு மேலும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share