×
 

சுதந்திர தினம் 2025: சிறப்பாக பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம்.. லிஸ்ட் இதோ..!!

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகளுக்கு, காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. 

1. க.த. பூரணி, காவல் துணை கண்காணிப்பாளர் சைபர் கிரைம் செல் பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.

இதையும் படிங்க: நாளை தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி.. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

2. மா.லதா, காவல் ஆய்வாளர், கடத்தல் தடுப்பு பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

3. பி. உலகராணி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, திருநெல்வேலி.

4. மா.வசந்தகுமார், காவல் ஆய்வாளர், பெருமாநல்லூர் காவல் நிலையம், திருப்பூர் மாவட்டம்.

5. ஜெ.கல்பனாதத், துணைக் காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, தஞ்சாவூர்.

6. மு.செந்தில்குமார், காவல் ஆய்வாளர், மகுடஞ்சாவடி காவல் நிலையம், சேலம் மாவட்டம்.

7. வே.சந்தானலெட்சுமி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, திண்டுக்கல்.

8. ரா.புவனேஸ்வரி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாகப்பட்டினம்.

9. கோ.திலகாதேவி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, அரியலூர்

10. வெ.ஜெகநாதன், காவல் ஆய்வாளர், வடக்கு காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்.

இதேபோல் பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல் துறை அதிகாரிகளுக்கு 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. 

1. மஹேஷ்வர் தயாள், கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர், சென்னை.

2. தா.மேரிரஜு காவல் ஆய்வாளர், சென்னை பெருநகர காவல்துறை

3. நை. சிலம்பரசன், காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்டம்.

4. ஜெ. மகேஷ், காவல் துறைத் துணைத் தலைவர், நுண்ணறிவு (உள்நாட்டுப் பாதுகாப்பு), சென்னை.

5. கு. பிரவின் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, தலைமையகம், சென்னை.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேலும் இந்த விருதுகள், காவல் துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் அவர்களின் தொடர் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன. சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் இந்தப் பதக்கங்களை வழங்கி, அதிகாரிகளின் சேவையைப் பாராட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, காவல் துறையினருக்கு உற்சாகத்தையும், மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்ல.. திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share