அருணாச்சலப் பிரதேசத்தின் 27 பகுதிகள் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் சேர்ப்பு.. சீனாவுக்கு இந்தியாபதிலடி!
அருணாச்சலப் பிரதேசத்தின் 'லாங்ஜூ' உள்ளிட்ட 27 இடங்களை இந்திய வரைபடத்தில் பதிவேற்றிச் சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் சீனா தொடர்ந்து மேற்கொண்டு வந்த தன்னிச்சையான நடவடிக்கைளுக்கும் சட்டவிரோத உரிமை கோரல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், அருணாச்சலப் பிரதேசத்தின் 'லாங்ஜூ' உள்ளிட்ட 27 முக்கிய எல்லைப் பகுதிகளை இந்தியக் கணக்கெடுப்புத் துறையின் (Survey of India) அதிகாரப்பூர்வ வரைபடத்தில் இந்திய அரசு முறைப்படி பதிவேற்றம் செய்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்குச் சீனா தன்னிச்சையாகச் சீன மொழியில் பெயரிட்டு, அப்பகுதிகளைத் தனது நாட்டின் வரைபடத்தில் இணைத்து உரிமைகோரல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தது. எல்லைப் பகுதியில் டிராகன் நாட்டின் இந்தச் சலசலப்புகளுக்குப் பூட்டு போடும் வகையில், இந்திய நிலப்பரப்புகளின் சரியான மற்றும் பாரம்பரிய இந்தியப் பெயர்களுடன் அதிகாரப்பூர்வ வரைபடத்தைப் புதிதாகப் புதுப்பித்து மத்திய அரசு வெளியிMilitary உத்தியில் காய் நகர்த்தியுள்ளது.
இந்திய-சீன எல்லை வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படும் 'லாங்ஜூ' பகுதி, தற்போது இந்தியக் கணக்கெடுப்புத் துறையின் புதிய நிலப்படத்தில் தெளிவாகக் குறிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்..!! பீதியில் தெருவில் தஞ்சமடைந்த மக்கள்..!!
அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கியப் பகுதிகளுக்குச் சீனா சூட்டியிருந்த போலிப் பெயர்களைப் புறந்தள்ளி, இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெயர்களையே சர்வதேச அளவில் நிலைநிறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியக் கணக்கெடுப்புத் துறை, இந்த 27 எல்லைப் பகுதிகளின் துல்லியமான புவியியல் அமைப்புகளைச் சரிபார்த்து, நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் சான்றளித்துப் பதிவேற்றியுள்ளது.
இந்திய எல்லையின் இறையாண்மையைக் காக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்தத் தீர்க்கமான முடிவு, சீனாவுடனான ராஜதந்திர மற்றும் எல்லை விவகாரங்களில் இந்தியாவின் கை ஓங்கியிருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இதையும் படிங்க: விண்வெளித் துறையில் புதிய வரலாறு..!! ராக்கெட் பூஸ்டரை கடலில் தரையிறக்கி அசத்திய சீனா..!!