×
 

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்! நமக்கு என்ன லாபம்? உலகமே கவனிக்கும் டீல்! 12 முக்கிய அம்சங்கள்!!

எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா, அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகி உள்ளது. இதில் இந்தியாவுக்கு என்ன லாபம் என்பதை பார்க்கலாம்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் (Interim Trade Agreement) இப்போது கையெழுத்தாகியுள்ளது. இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய சந்தை வாய்ப்பை திறந்து வைக்கிறது. முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு விதித்த வரிகளை 18 சதவீதமாக குறைக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் அபராத வரி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், காலணிகள், பிளாஸ்டிக், ரப்பர், கரிம ரசாயனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், சில இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி குறைப்பு பெரும் நிவாரணம் தரும்.

மருந்துகள், ரத்தினங்கள், வைரங்கள், விமான பாகங்கள் உள்ளிட்ட பல இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு வரி முழுமையாக நீக்கப்படும். விமானங்கள் மற்றும் விமான உதிரி பாகங்களுக்கான வரிகளும் தனியாக நீக்கப்படுகின்றன. இதனால் 'மேக் இன் இந்தியா' திட்டம் மேலும் வலுப்பெறும்.

இதையும் படிங்க: லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்! வரிகள் பூஜ்யமாகும்! இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! பியூஸ் கோயல் நம்பிக்கை!

இந்தியா அமெரிக்காவின் உலர்ந்த தானியங்கள், சிவப்பு சோளம், கொட்டை வகைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயா எண்ணெய், ஒயின், மதுபானங்கள் உள்ளிட்ட விவசாய மற்றும் உணவு பொருட்களுக்கான வரிகளை குறைக்கிறது அல்லது நீக்குகிறது. வரி அல்லாத தடைகளும் இரு நாடுகளும் எளிதாக்குகின்றன. அமெரிக்க மருத்துவ சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப பொருட்களுக்கான உரிம கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுகின்றன.

அடுத்த 5 ஆண்டுகளில் விமானம், விமான பாகங்கள், உலோகங்கள், நிலக்கரி உள்ளிட்ட 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவடைந்த பிறகு முழுமையான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை தொடரும். இதில் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கான வரி குறைப்பு கோரிக்கையை அமெரிக்கா பரிசீலிக்கும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதி துறைகளுக்கு புதிய உயரத்தை தரும். குறு, சிறு தொழில்கள், விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்கள் பெரிதும் பயனடைவர். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்திய-அமெரிக்க பொருளாதார உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்காவிற்கு இது ஒரு மகத்தான செய்தி!! Thank you Trump! பிரதமர் மோடி பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share