×
 

பிளஸ் டூ மாணவி கொடூர கொலை... அவ்வளவும் அலட்சியம்..! இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!!

தூத்துக்குடியில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முறையாக விசாரிக்கவில்லை என கூறி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த இந்த மாணவி, வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக தனியாகச் சென்றுள்ளார்.

அப்போது, அவரைப் பின்தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டுப்பகுதியில் சிதறடித்து வைத்துள்ளனர். மாலை சுமார் 5 மணியளவில் அந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. மாணவியின் உடலில் முகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும், பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு கொலை செய்யப்பட்டதாகவும் கூறி கிராம மக்களும் உறவினர்களும் குற்றம் சாட்டினர். சடலம் கண்டெடுக்கப்பட்டதும், குளத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்தனர். மாணவியின் குடும்பத்தினரும் உறவினர்களும் காவல் துறையின் மெத்தனப்போக்கைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களும் பெரும் ஆத்திரத்தில் உள்ளனர். மாணவியை காணவில்லை எனக் கூறி போலசாரிடம் தெரிவித்த நிலையில் மிகவும் அலட்சியத்துடன் பதில் அளித்ததாகவும், காணாமல் போன மாணவி மீதே பழி போட்டதாகவும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். காவல்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் வீடு புகுந்து அதி பயங்கரம்.. துண்டு துண்டாக சிதறிய உடல் பாகங்கள்... ஈரக்குலை நடுங்க வைத்த கொடூரம்..!

இந்த நிலையில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாணவியை காணவில்லை என பெற்றோர் புகார் கூறியும் முறையாக விசாரிக்கவில்லை என ஆய்வாளரின் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரவெட்டியை சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய மடப்புரம் அஜித் கொலை வழக்கு... நகை திருட்டு புகாரை முடிக்க நிகிதா சம்மதம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share