×
 

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன் என மிரட்டியதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மவுண்ட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் முகமது புகாரி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க வைத்துவிடுவேன் என மிரட்டி நகை வியாபாரியிடம் இருந்து ரூ.40 லட்சத்துக்கும் மேல் பணம் பறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவர் முதலில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 35 வயதான அகில் குமார் நகை வியாபாரம் செய்து வருகிறார். அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், 2024ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனிப்படையில் புகாரி பணியாற்றியதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த விசாரணையின் போது தனது செல்போன் எண், வழக்கில் தொடர்புடைய ஒருவரின் தொடர்புப் பட்டியலில் இருந்ததாகக் கூறி, தன்னையும் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்துவிடுவதாக ஆய்வாளர் மிரட்டியதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் மீண்டும் அகில் குமாரின் வீட்டுக்கு வந்த ஆய்வாளர் புகாரி, 20 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டதோடு, மேலும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாருடன் தொடர்புடைய ஆடியோ, வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களையும் அகில் குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். துணை காவல் ஆணையர் கோபி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், மவுண்ட் காவல் நிலைய ஆய்வாளர் புகாரி ஆகஸ்ட் 3ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆய்வாளர் புகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையில் லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் யாராவது ஈடுபட்டாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உயரதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், பொய் புகார் போடுவேன் என மிரட்டி பெரும் தொகையைப் பறித்த இந்த விவகாரம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share