கோவை டூ டெல்லி கார் குண்டு வெடிப்பில் இப்படியொரு தொடர்பா?... தமிழகத்தின் பக்கம் பார்வையைத் திருப்பும் NIA...!
டெல்லி கார் குண்டுவெடிப்பு கிட்டத்தட்ட கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு வெடித்த கார் போன்ற சாயலில் இருப்பதாக NIA அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மக்களை விஷம் கொடுத்துக் கொள்ளும் நோக்கில் செயல்பட்ட இவர்கள் குஜராத்தில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில் பிடிபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரிசின் எனப்படும் கொடிய உயிரணு நச்சுப்பொருள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சதி சாதாரண பயங்கரவாத தாக்குதல் அல்ல. துப்பாக்கி, குண்டு, வெடிகுண்டு போன்றவற்றை மக்களின் மத நம்பிக்கையை சிதைக்கவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகள் ஆமணக்கு விதையிலிருந்து தயாரிக்கப்பட்ட ரிசின் எனும் கொடிய விஷத்தை கோயில்களில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் பிரசாதம், குடி தண்ணீர், தீர்த்தம் போன்றவற்றிலும், ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் வழங்கப்படும் சமூக உணவு அல்லது இனிப்புகளில் கலந்து கொடுத்து பெரும் அளவிலான உயிர்களைப் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல்... தமிழ்நாட்டுக்கு தான் அதிக ஆபத்து! அண்ணாமலை கடும் எச்சரிக்கை...!
மேலும் டெல்லி கார் குண்டுவெடிப்பு கிட்டத்தட்ட கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு வெடித்த கார் போன்ற சாயலில் இருப்பதாக NIA அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கோயம்புத்தூரில் பெரும் தாக்குதல் செய்ய திட்டமிட்டபோது விஷயம் இந்திய உளவு அமைப்புகளால் கண்டறியப்பட்டு ரகசிய நடவடிக்கை எடுக்கும்போது, இனி தாக்குதல் சாத்தியமில்லை கைது உறுதி என அஞ்சிய பயங்கரவாதி முபின் என்பவர் கோட்டை ஈஸ்வரன் கோவில் வாசலில் காரை வெடிக்கச் செய்து பலியானார்.
பாதுகாப்புப் படைகளால் தனது கூட்டாளிகள் பிடிபட்டதால், பீதியடைந்த மருத்துவர் உமர் முகமது நபி, செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் வெடிகுண்டை முன்கூட்டியே வெடிக்கச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஃபரிதாபாத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவையில் நடந்ததும் டெல்லியில் நடந்ததும் ஒரே வகை முயற்சி அதே அமோனியம் நைட்ரேட் என்னும் உரத்தை வெடிகுண்டாக்கிய முயற்சி. தமிழகத்தில் அப்போது அதிகாலை என்பதால் யாரும் உயிரிழக்கவில்லை. டெல்லியில் ரயில் நிலையம் அதுவும் மாலை பரபரப்பான நேரம் என்பதால் பெரும் உயிரிழப்பு நடந்ததாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் என்.ஐ.ஏ பார்வை தமிழகம் பக்கம் திரும்பி இருக்கிறது. மேலும் மதரீதியாக பேசும் தலைவர்களை சுற்றி வளைக்க இருக்கிறது. அவர்களின் பின்னால்தான் தேச துரோகிகள் ஒழிந்து கொள்கிறார்களோ?என்ற சந்தேகம் வழுத்திருக்கிறது. விசாரணையில் வெளிப்பட்ட முக்கிய தகவலின் படி, இந்த மருத்துவர்கள் அனைவரும் மத அடிப்படையிலான தீவிரவாத விளக்கங்கள் மூலம் மாற்றப்பட்டவர்கள். அவர்களுக்கு புனித போர் என்ற பெயரில் மக்களை விஷம் கொடுத்து கொல்லும் பணி அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் டாக்டர் ஷாகின் சையித் என்ற பெண் ஜெய்சி முகமது அமைப்பின் பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சமூக ஊடகங்கள் வழியாக இந்தியாவில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரமாக நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத வேட்டை தீவிரமாக நடைபெற்று வந்ததோடு, புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில ஏடிஎஸ் பிரிவுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதும் மிகப்பெரிய அசம்பாவிதத்தை தடுக்க உதவியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை...!