×
 

பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!

புதிதாக உதயமாகியுள்ள 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடிப்படையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் முக்கியமான அமைப்புரீதியான மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 77 ஆக இருந்த கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான முடிவை கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளார்.

நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில், புதிய 110 மாவட்டங்களின் விவரங்களும், அந்தந்த மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இதில் அதிக மக்கள்தொகை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரப் பகுதிகளில் மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கள அளவில் நிர்வாகம் மற்றும் தொடர்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள 77 மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய 110 மாவட்டங்களில் எந்தெந்த ஒன்றியம், நகரம், பேரூர் பகுதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயற்குழுவைக் கூட்டி, பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் தலைமைக்கு அனுப்ப வேண்டும். தலைமைச் செயலகத்திலிருந்து அனுப்பப்படும் பிரதிநிதி முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெறும்.

இதையும் படிங்க: கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை.. திமுகவில் 110 புதிய மாவட்டங்கள்! விரைவில் வெளியாகும் பட்டியல்!!

திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பொதுவாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதற்கு முன், அந்த மாவட்டங்களைக் கவனிக்க பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் நடைபெறும் வரை அவர்களே நிர்வாகத்தை கையாள்வார்கள். இந்த வகையில், புதிய 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த 110 பொறுப்பாளர்களையும் செப்டம்பர் 17 அன்று நடைபெறவிருக்கும் திமுக முப்பெரும் விழாவில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். முப்பெரும் விழா நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த மறுசீரமைப்பு, கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தி, வரும் தேர்தல்களில் வெற்றி பெற உதவும் என கட்சித் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் மாவட்ட நிர்வாகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: திமுகவில் பரபரப்பு.. கனிமொழி - உதயநிதி தரப்புகளுக்கு இடையே மோதல்? உட்கட்சி அதிகாரப் போட்டி உச்சம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share