×
 

திருவள்ளூர் ரயில் தீ விபத்து.. அதிகாரிகளிடம் உயர்மட்ட குழு விசாரணை..!

ரயில் தீ விபத்து தொடர்பாக திருவள்ளூர் ரயில் நிலைய அதிகாரிகளிடம் உயர்மட்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஜூலை 13ம் தேதியான நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில், சென்னை மணலி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து மைசூரு நோக்கி எரிபொருள் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திருவள்ளூர் ஏகாட்டூர் அருகே வந்தபோது, திடீரென தீ பிடித்து எரிந்தது. சரக்கு ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் ஏகாட்டூரைச் சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த கரும்புகையின் பாதிப்பு உணரப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களுக்கு கடுமையான மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.  

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் தேசிய மீட்பு படையினர், ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். டீசல் டேங்கர் ரயிலில் அதிகாலை பற்றிய தீ, சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமானது. டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம், மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐ.நா., விசாரணை வேண்டாம்.! நாங்களே பார்த்துக்குறோம்! ஏர் இந்தியா விமான விபத்தில் மத்திய அரசு திட்டவட்டம்..

இதனைத்தொடர்ந்து முதல், இரண்டாவது தண்டவாள பகுதியில் கவிழ்ந்து விழுந்த 18 டேங்கர்களை இரண்டு ராட்சத கிரேன் உதவியுடன் 21 மணி நேரம் போராடி அப்புறப்படுத்தப்பட்டன. மற்றொரு புறத்தில் புறநகர் ரயில்கள் செல்லக்கூடிய நான்காவது மூன்றாவது தாண்டவளம் பகுதி இரவு சீரமைக்கப்பட்டுஅ ந்த தண்டவாளப் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தே பாரத், புறநகர் ரயில்கள் குறைந்த வேகத்தில் கடந்து இயக்கப்பட்டு வருகின்றன.

விபத்து ஏற்பட்ட தண்டவாளம் ஒன்று, இரண்டு பகுதியில் 300 மீட்டர் அளவில் முழுமையாக சேதமடைந்து இருப்பதால் அத்தகைய தண்டவளங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணியில் 26 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திருவள்ளூர் டேங்கர் ரயில் தீ விபத்திற்கு தண்டவாள விரிசலே காரணம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக லோகோ பைலட்டின் ரத்தம் மாதிரியை சேகரித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது. பணிக்கு வருவதற்கு முன்பாக லோகோ பைலட் மது அருந்தினாரா? என்பது குறித்து திருவள்ளூர் ரயில் நிலைய அதிகாரிகளிடம் உயர்மட்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: 7 மணி நேர போராட்டம்.. அணைக்கப்பட்ட தீ..!! இத்தனை கோடி மதிப்பிலான டீசல் நாசமா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share