×
 

ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

ஈரான் மீதான போர், பெரும் பொருளாதார பாதிப்புகளை உருவாக்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புலம்பியு உள்ளார்.

இஸ்லாமாபாத்: ஈரான் மீதான போர் பாகிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணுசக்தி நாடாக மாறிய அதே அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் நாட்டை ஒரு வலிமைமிக்க பொருளாதார சக்தியாக மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “அணுசக்தி என்பது பாகிஸ்தானின் பாதுகாப்பு சொத்து. இது தாக்குதலுக்கானது அல்ல, பாதுகாப்புக்கானது மட்டுமே. இதனால்தான் உலக நாடுகள் பாகிஸ்தானை பொறுப்பான அணுசக்தி நாடாக அங்கீகரித்துள்ளன” என்றார்.

என்றாலும், தற்போது மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக அவர் புலம்பினார். எரிபொருள் விலை உயர்வு, வர்த்தகம் பாதிப்பு, அந்நிய செலாவணி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போரால் கடுமையான பொருளாதார பின்னடைவு!! புலம்பித் தள்ளும் பாக்., பிரதமர்!!

பாகிஸ்தான் அணுசக்தி திறன் பெற்றபோது காட்டிய அதே ஒற்றுமை மற்றும் உழைப்பை இப்போது பொருளாதார வளர்ச்சிக்கும் காட்ட வேண்டும் என்று பிரதமர் தனது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பொருளாதார சீர்திருத்தங்கள், தொழில் முதலீடுகள், ஏற்றுமதியை அதிகரித்தல் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேற்காசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பாகிஸ்தானின் அன்றாட வாழ்க்கையையும் பாதித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொருட்கள் விலை ஏற்றம் உள்ளிட்டவை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. இந்தச் சூழலில் பாகிஸ்தான் அரசு பொருளாதாரத்தை துரிதமாக மீட்டெடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் ஷெரீப் தெரிவித்தார்.

உலக அரங்கில் பொறுப்பான அணுசக்தி நாடாக தன்னை நிலைநாட்டிய பாகிஸ்தான், இப்போது பொருளாதார வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்ற ஷெபாஸ் ஷெரீப்பின் பேச்சு பாகிஸ்தான் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமா? 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அஸ்திவாரம் போடும் பாக்.,!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share