×
 

கல்லணை திறக்க வருகிறாரா முதல்வர் விஜய்? - அமைச்சர் வினோத் கொடுத்த அப்டேட்...!

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு ஆறாம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் விரைவில் தூர்வாரப்படும் என வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 இந்த வருடம் 45 நாட்கள் கால தாமதமாக மேட்டூர் அணை பாசனத்திற்காக கடந்த செப்டம்பர் முதல் தேதி திறக்கப்பட்டது .  மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு ஆறாம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அன்று காலை டெல்டா பாசத்திற்காக கல்லணை திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கும்பகோணம் காவிரி ஆற்றில் மண்டியுள்ள நெய்வேலி காட்டாமணக்கு செடிகள், கோரை புற்கள், ஆகியவற்றை அகற்றும் பணியினை வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று துவக்கி வைத்தார்.

இதையும் படிங்க: சாலை விபத்தில் பறிபோன 4 மாணவிகள் உயிர்..!! நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்..!!

 கும்பகோணம் கீழ கொட்டையூர் என்ற இடத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு காவிரி ஆற்றில் செடி கொடிகள் மண்டி உள்ளது .
 மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், காவிரி ஆற்றில் அவசர அவசரமாக தூர்வாரும் பணியினை அமைச்சர் வினோத் இன்று துவக்கி வைத்தார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது கல்லணை திறப்பதற்கு முதல்வர் வருவாரா? என கேட்டதற்கு தலைமை அலுவலகம் இது பற்றி தெரிவிக்கும் என தெரிவித்தார். மேலும் கும்பகோணம் நகரில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்றும் இதற்காக இந்த வாய்க்கால்களில் கழிவுநீர் சேருவதை அடைக்கும் பணி விரைவில் துவங்கம் என்றும், அதனைத் தொடர்ந்து கும்பகோணம் நகரில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதல்வருக்கு தூக்கமே இல்ல..! குறைகள் தீர்க்கப்படும்.. அமைச்சர் ஆதவ் உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share