அமெரிக்கர்களை காசு கொடுத்து தூண்டிவிடும் இஸ்ரேல்... ஈரான் போருக்கு பின்னால் பகீர் சதி... ஜே.டி.வான்ஸ் குற்றச்சாட்டு...!
ஈரான் போரை காலவரையறையின்றி நீட்டிக்க இஸ்ரேல் திட்டமிட்டுச் செயல்படுகிறது என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் குற்றச்சாட்டு
ஈரான் போர் தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளில் இஸ்ரேலின் அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுவதை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மறுத்துள்ளார்.
"இஸ்ரேலிய அரசாங்கம் அமெரிக்க அரசியலில் எந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்துகிறது என்பது பற்றி நிறையப் பேசப்படுகிறது. இஸ்ரேலிய அரசாங்கத்திற்குள்ளேயே இந்த ஒப்பந்தத்தை வெறுக்கும் சில நபர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள். அதற்கான தெளிவான ஆதாரங்களையும் நாம் காண்கிறோம்," என்று வேன்ஸ் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தைக் கண்டிக்குமாறு தங்கள் சோசியல் மீடியாக்களில் அமெரிக்கர்களை தூண்டுவதற்காக, பணம் கொடுத்து வந்த இஸ்ரேலிய அரசாங்க நிதியுதவி பெற்ற பிரச்சாரத்துடன், டிரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார மேலாளரான பிராட் பார்ஸ்கேலுக்குத் தொடர்பு இருந்ததாக, டைம் இதழில் வெளியான செய்தி ஒன்றையும் அவர் குறிப்பிட்டார் .
இதையும் படிங்க: இந்தியாவுக்கு மகிழ்ச்சி தரும் அமெரிக்க அறிவிப்பு.. ரஷிய எண்ணெய் வரி 500%-இலிருந்து 100% ஆகக் குறைப்பு..!!
"பேச்சுவார்த்தையையும் ஒப்பந்தத்தையும் சீர்குலைக்க முயற்சிக்கும் இந்த மிகவும் ரகசியமான, பெரும் நிதி ஆதரவு பெற்ற பிரச்சாரத்தை நீங்கள் நிச்சயமாகப் பார்த்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று வேன்ஸ் ரோகனிடம் கூறினார்.
" அந்த டைம் கட்டுரை படிக்கத் தகுந்தது, ஏனென்றால், இஸ்ரேலிய அரசாங்கத்திற்குள் உள்ள சில தரப்பினரிடமிருந்து பணம் பெற்ற முன்னாள் டிரம்ப் பிரச்சார நபர் ஒருவரால், அச்சு அசலாகப் பணம் பெற்ற பலரின் பெயர்களை அது பட்டியலிடுகிறது. மேலும், அதிபர் நாட்டிற்காக நிர்ணயித்த பேச்சுவார்த்தை நோக்கத்தை அச்சு அசலாக நிறைவேற்ற நான் முயற்சி செய்வதற்காக, அந்த நபர்கள் என்னை மூர்க்கத்தனமாகத் தாக்குகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
"நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன், இஸ்ரேலிய அரசாங்கத்தின் சில பிரிவுகள் இந்த ஒப்பந்தத்தை விமர்சிக்க விரும்பினாலோ அல்லது அது குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலோ, நான் அதைப்பற்றி உண்மையில் கவலைப்படவில்லை. வெளிநாட்டு அரசாங்கங்கள் அமெரிக்காவைத் தங்கள் செல்வாக்கிற்குள் கொண்டுவர முயற்சிப்பதைக்கூட நான் எப்போதும் பொருட்படுத்துவதில்லை. உங்களுக்குத் தெரியும், இஸ்ரேல் அதைச் செய்கிறது, மற்ற நாடுகளும் அதைச் செய்கின்றன. இது இந்த விஷயத்தின் இயல்பு," என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ”இந்த ரேட் ரொம்ப ஜாஸ்தி...” - அமெரிக்காவை வாண்டடாக வம்பிழுத்த ஈரான்... டிரம்பிற்கு நக்கல் பதிலடி...!