×
 

2028-ல் சந்திரயான் 4… விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம்? மாஸ் அப்டேட் கொடுத்த இஸ்ரோ தலைவர்…!

2028 ஆம் ஆண்டு சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

இஸ்ரோவின் சந்திரயான் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிக முக்கியமான சந்திர ஆய்வுத் திட்டங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் விண்வெளி திறனை உலக அரங்கில் நிலைநாட்டியது மட்டுமல்லாமல், சந்திரனின் மேற்பரப்பு, அதன் கனிமங்கள், நீர் இருப்பு போன்றவற்றை ஆராய்வதற்கான முயற்சியாகவும் அமைந்தது. சந்திரயான் திட்டம் மூன்று பெரிய கட்டங்களாக நடைபெற்றுள்ளது. ஒவ்வொன்றும் முந்தையதை விட மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது.

முதல் சந்திரயான் திட்டமான சந்திரயான்-1, 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து PSLV-C11 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஒரு ஆர்பிட்டர் மட்டுமே கொண்டிருந்தது மற்றும் சந்திரனைச் சுற்றி 100 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்து ஆய்வு செய்தது.  இதைத் தொடர்ந்து சந்திரயான்-2 திட்டம் 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி GSLV Mk-III ஏவுகணை மூலம் செலுத்தப்பட்டது. இது முந்தையதை விட மிகவும் சிக்கலானது, ஏனெனில் இதில் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று பகுதிகளும் இடம்பெற்றிருந்தன. ஆர்பிட்டர் சந்திரனைச் சுற்றி ஆய்வு செய்ய, லேண்டர் மென்மையாக தரையிறங்கி ரோவரை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, செப்டம்பர் 7, 2019 அன்று விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டது மற்றும் கடினமாக விழுந்து செயலிழந்தது. இருப்பினும், ஆர்பிட்டர் இன்றும் சுற்றி வருகிறது மற்றும் உயர் தெளிவு படங்கள், வெப்பநிலை வரைபடங்கள், கனிம ஆய்வுகள் போன்றவற்றை தொடர்ந்து அனுப்பி வருகிறது.  சந்திரயான்-3 திட்டம் இந்தியாவின் விடாமுயற்சியின் உச்சமாக 2023 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி LVM3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-2 இன் தோல்வியிலிருந்து பாடம் கற்று, இஸ்ரோ இந்த முறை லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் கொண்டு மிகவும் வலுவூட்டப்பட்ட வடிவமைப்பை உருவாக்கியது. 

இதையும் படிங்க: இஸ்ரோவின் 'பாகுபலி' LVM3 ராக்கெட்..!! CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்வெளியில்..!!

இந்த நிலையில், நிலவில் இருந்து மாதிரியை கொண்டுவரும் மிகவும் சிக்கலான திட்டமான 'சந்திரயான் 4' திட்டத்தை 2028ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான், திட்டமிட்டபடி 2027ம் ஆண்டு நடைபெறும் என்றும் அவர் கூறினார். 

இதையும் படிங்க: #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்... விஞ்ஞானிகள் உற்சாகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share