ஜனநாயகன் படத்தை நானும் பார்த்தேன்..! வாயை கொடுத்து மாட்டிய பி.டி. செல்வகுமார்..!
தானும் ஜனநாயகம் படத்தை பார்த்தேன் என்று கூறி பிடி செல்வகுமார் மாட்டிக்கொண்டார்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்திற்கு இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாத நிலை இருக்கிறது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் படத்தின் சுமார் ஐந்து நிமிட காட்சிகள் கசிந்து பரவத் தொடங்கின. இந்தக் காட்சிகளில் படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ், விஜய்யின் அறிமுக காட்சி, சிறைச்சாலை அமைப்பில் அவர் ஷவல் வைத்திருக்கும் பகுதி, அவரது சிறப்பு ஸ்டைலில் நடக்கும் சண்டை காட்சி மற்றும் “தளபதி கச்சேரி” பாடலின் ஒரு பகுதி ஆகியவை அடங்கியுள்ளன.
ஐந்து நிமிட கிளிப் மட்டும் இல்லாது முழு படமும் இணையதளத்தில் வெளியாகி படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தின் லிங்குலித்தவற்றை பகிர்ந்தாலோ அதனை பதிவிறக்கம் செய்து பார்த்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாரிசு, பணபலம் இருந்தால் தான் சீட்..! திமுகவிலிருந்து விலகிய பி.டி. செல்வகுமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!
இந்த நிலையில் ஜனநாயகன் படம் குறித்து பி.டி. செல்வகுமார் கருத்து தெரிவித்த போது, அந்த படத்தை பார்த்தேன் என்று கூறி மாட்டிக் கொண்டார். அப்போது, என்னது ’ஜனநாயகன்’ படத்தை பாத்தீங்களா? எப்படி பாத்தீங்க..? உங்களுக்கு எப்படி அந்த படத்தோட லிங்க் கிடைச்சது.? என்ற செய்தியாளர் சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது, தடுமாறி எல்லோரும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சற்று மழுப்பியும் பி.டி.செல்வகுமார் சமாளித்தார்.
இதையும் படிங்க: தவெக போட்டி குறித்து நோ கமெண்ட்ஸ்! பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 'கூல்' பதில்!