×
 

விஜய் அரெஸ்ட் பண்ணுங்க..! ஜனநாயகம் படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு காட்சி..? போலீசில் புகார்..!

ஜனநாயகன் படத்தின் இயக்குனர் மற்றும் விஜயை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்திற்கு இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாத நிலை இருக்கிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் படத்தின் சுமார் ஐந்து நிமிட காட்சிகள் கசிந்து பரவத் தொடங்கின.

இந்தக் காட்சிகளில் படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ், விஜய்யின் அறிமுக காட்சி, சிறைச்சாலை அமைப்பில் அவர் ஷவல் வைத்திருக்கும் பகுதி, அவரது சிறப்பு ஸ்டைலில் நடக்கும் சண்டை காட்சி மற்றும் “தளபதி கச்சேரி” பாடலின் ஒரு பகுதி ஆகியவை அடங்கியுள்ளன. ஐந்து நிமிட கிளிப் மட்டும் இல்லாது முழு படமும் இணையதளத்தில் வெளியாகி படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக விஜய் மற்றும் இயக்குநரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான ஜனநாயகன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜனநாயகன் பிரச்சனைக்கு உதயநிதியும், எல். முருகனும் தான் காரணம்..! ஆதவ் பகிரங்க குற்றச்சாட்டு..!!

மேலும் படத்தை வெளியிட சென்சார் போர்டு அனுமதி தராத நிலையில் விஜய் உள்ளே டோர் திட்டமிட்டு இணையதளத்தில் வெளியிட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் செய்து தேர்தலை நிறுத்த அல்லது வன்முறை கட்டவிழ்த்து விட விஜய் உள்ளிட்ட திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: எலக்ஷன் வந்தாச்சு..!! விஜய் படத்தின் டிரைலர் கூட திரையிடக்கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share