×
 

இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி..!! மமகவிற்கு எத்தனை தொகுதிகள்? ஜவாஹிருல்லா பேட்டி..!!

இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இசைவு தெரிவித்திருப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை வேகமாக தொடங்கியுள்ள நிலையில், இன்று முக்கியமான ஒரு நாளாக அமைந்துள்ளது. குறிப்பாக மனித நேய மக்கள் கட்சி உடனான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. திமுக ஏற்கனவே தனது தொகுதி பங்கீட்டு குழுவை அமைத்து, தலைமை தொகுதி பேச்சுவார்த்தையாளராக டி.ஆர். பாலுவை நியமித்திருந்தது.

மனித நேய மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று மணப்பாறை, பாபநாசம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றது. அந்த வெற்றி அவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. எனவே இம்முறை ஐந்து தொகுதிகள் வரை கேட்கும் மனநிலையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஏற்கனவே பல நேர்காணல்களில் இதைத் தெளிவாகக் கூறி இருந்தார்.

இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு முதற்கட்ட பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். திமுக உடனான தொகுதி பங்கேட்டின் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகளை தெரிவித்திருப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்... ஸ்டாலின் பக்கம் சாயும் ஓபிஎஸ்? அரசியலில் திருப்புமுனை..!!

கடந்த தேர்தலைப் போலவே தற்போதும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இசைவு தெரிவித்திருப்பதாகவும் கூறினார். 2021 தேர்தலில் மணப்பாறை மற்றும் பாபநாசம் தொகுதிகளில் போட்டியிட்டதாகவும், தற்போது ஐந்து தொகுதிகளை கேட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கைகளை முதலமைச்சர் இடம் எடுத்துக் கூறி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறியிருப்பதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

இதையும் படிங்க: நயினார் எல்லாம் ஒரு ஆளா? பாஜக- லாம் ஒரு கட்சியா? விஜய் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share