×
 

இபிஎஸ் மகனை காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி? அந்தர் பல்டி அடித்த ஜெயக்குமார்..!

திமுக சர்வாதிகார ஆட்சியில் முகத்திரையை கிழிக்கும் வகையில் அமலாக்கத்துறை ஊழல் அனைத்தையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். இந்த சர்வாதிகார ஆட்சியினுடைய முகத்திரையை கிழிக்கின்ற வகையில் ஊழல் அனைத்தையும் அமலாக்கத்துறை வெளிகொண்டு வர வேண்டும் என்றும் அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம் என்றும் கூறினார்.

அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிச்சாமியின் மகனை காப்பாற்ற தான், எனும் குற்றச்சாட்டை முன் வைத்து செய்தியாளர்கள் எழுதிய கேள்விக்கு, ஜெயக்குமார் மழுப்பலாக பதில் அளித்தார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரை தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டார்., அதையும் இதையும் ஒப்பிட வேண்டாம்., தற்போது உள்ள நிலைமையை பார்க்க வேண்டும் என்று கூறினார். 

இதையும் படிங்க: கிராமங்களில் வீட்டு வரி உயர்வு.. இது தான் அலங்கோல ஸ்டாலின் ஆட்சி.. இபிஎஸ் பாய்ச்சல்..!

மிகப் பெரிய அளவில்ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துவிட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகவும், தன்மகன் உதயநிதி ஸ்டாலினை காப்பாற்றுவதற்காக தன்மானத்தை விட்டு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார் எனவும், காலில் விழகூட தயங்க மாட்டார்கள் என்றும், இது கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் கைவந்த கலை எனவும் விமர்சித்தார். இதைவிட ஒரு கேவலமான ஒன்று இருக்காது என்றும் இது போல தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் பெற்றெடுப்பது ஒரு வேதனை தரும் விஷயம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

இதையும் படிங்க: எல்.முருகன், நயினார் நாகேந்திரனுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. அரசியல் அரங்கில் பரபரப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share