×
 

குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!

பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

குதிரை பேரமா.? சிபிஐ விசாரணை எதிர்கொள்ள தயார் என பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெருந்துறை அதிமுக எம்எல்ஏவாக இருந்து பதவியை ராஜினாமா செய்து தவெக.வில் இணைந்த பின் ஜெயக்குமார் இன்று தனது சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு பெருந்துறையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி ஆகியோருடன் இணைந்து பெருந்துறையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

பின்னர் ஜெயக்குமார் அளித்த பேட்டி அளித்தார். பல்வேறு இக்கட்டான சூழ்நிலைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்பட்டோம். இரண்டாவது முறை எம்எல்ஏவாக பணியாற்றிய எனக்கு கஷ்டமான சூழ்நிலை உருவானது. திமுகவுடன் சேர்ந்து முதல்வராகவோம் என சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.எம்ஜிஆர் ஜெயலலிதா கோட்பாட்டோடு பயணித்த எங்களுக்கு உணர்வுபூர்வமாக பயணிக்க முடியவில்லை என்பதால் எதிர்காலம் முதல்வர் விஜய் தலைமையில் என்பதால் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தோம் என்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதிக்குள் எம்எல்ஏவாக எந்தவொரு பணியும் செய்யமுடியவில்லை. ஆனாலும் பொறுத்துக்கொண்ட நிலையில் தற்போது மீண்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சியாக இருந்து என்ன செய்ய போகிறோம் என்ற முடிவோடு, எதிர்காலம் தவெக தான் என முடிவு செய்தோம் எனவும் தெரிவித்தார். குதிரை பேரம் எதற்கு.? 25 ஆண்டுகள் அதிமுகவில் பயணித்த எங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதால் எப்படி பயணிக்கமுடியும் என்று கேட்டுள்ள அவர், நாங்கள் உழைத்து ஒவ்வொரு கிராமமும் சுற்றி இப்பதவி பெற்றேன்.

இதையும் படிங்க: குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும்போது வலி இருந்தது.,எம்ஜிஆர் மறு உருவமாக முதல்வர் விஜய்யை பார்க்கிறேன் என்றும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தலைமை முடிவு எடுக்கும் எனவும் தான் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததை சிபிஐ விசாரணை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "ஒரு ரூபாய் கொடுத்தாச்சு... மீதியை பிறகு தர்றேன்"... சீட்டுக்கு பேரம்...வைரலாகும் தவெக நிர்வாகி ஆடியோ..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share