×
 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டுக்கு சீல்..!! மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ஐதராபாத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் யூசுஃப்குடா, ஜி.எச்.எம்.சி வட்டம்-38 மண்டலத்தில் ஸ்ரீநகர் காலனியில் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா பெயரிலான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் தொடர்பான சொத்து வரி நிலுவைத் தொகை 2017 முதல் நிலுவையில் இருப்பதோடு அதிகரித்து வருவதால், துணை ஆணையர் சுரேஷ் கடந்த பிப்ரவரியில் ஜெயலலிதாவுடன் தொடர்புடைய நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

சம்மந்தப்பட்டவர்கள் உரிய பதிலளிக்காததால், ஜி.எச்.எம்.சி மாநகராட்சி அதிகாரி பல்ராஜ் தலைமையிலான ஊழியர்கள் கட்டிடத்திற்கு வைத்தனர். தற்போது, கட்டிடம் முழுமையாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் அதிகாரிகள் அங்கு அறிவிப்புகளை ஒட்டியுள்ளனர். 

அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்தவித பதிலும் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வரி வசூல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கட்டிடத்தை சீல் வைக்கும் முடிவுக்கு அதிகாரிகள் வந்தனர். இந்தச் செயல் GHMC சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: ஒரு சிலிண்டர் விலை ரூ. 4000...!! ஒழுங்கா பதில் சொல்ல முடியாதா? கியாஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!!

மேலும் நகரின் நிதி ஆண்டு முடிவுக்கு முன்பாக வரி பாக்கிகளை வசூலிக்கும் வகையில் GHMC மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திய ஜெயலலிதாவின் சொத்துக்களுடன் தொடர்புடையதாக இருப்பதால் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதையும் படிங்க: எங்க வேட்பாளர்யா..! தர்மபுரிக்குச் சென்ற சௌமியா அன்புமணி... உற்சாக வரவேற்பு கொடுத்த தொண்டர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share