×
 

துப்பாக்கி முனையில் துணிகரம்... பட்டப்பகலில் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை... நடந்தது என்ன?

நகை பறித்து சென்றவர்கள் குறித்து விசாரனை செய்து வரும் போலீசார் கொள்ளையர்கள் பயன்படுத்தியது உண்மையான துப்பாக்கியா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

விழுப்புரத்தில் பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில்  நகை வியாபாரியிடம் (கொல்லர்) இரண்டு கோடியே 40 லட்சம் மத்பிலான இரண்டு கிலோ தங்க நகைகளை முகமூடி அணிந்த நபர்கள் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் நகர பகுதியான பெருமாள் கோவில் தெருவிலுள்ள கோட்டை வினாயகர் கோவிவில் முன்பாக விராட்டிக்குப்பம் பாதையை சார்ந்த நகை தொழில் செய்யும் கொல்லர்  ராஜமாணிக்கம் என்பவர் தங்க கட்டிகளை சென்னையிலிருந்து வாங்கி வந்து ஜிமிக்கி,மோதிரம் நகையாக செய்து இரண்டு கிலோ அளவிலான தங்க நகைகளை பேக்கில் எடுத்து கொண்டு ரயில் மூலமாக சென்னை செல்ல வந்துள்ளார்.

அப்போது நகை தொழிலாளியை பின் தொடர்ந்து வந்த 5 பேர் முகமூடி அணிந்து கொண்டு நகை தொழிலாளியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இரண்டு கிலோ அளவிலான தங்க நகைகளை பறித்து சென்றுள்ளனர். நகைகளை பறிகொடுத்த ராஜமாணிக்கம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே விரைந்து வந்த விழுப்புரம் எஸ் பி சாய் பிரனீத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக  நகை கொல்லரிடமிருந்து நகை பறித்து சென்றவர்கள் குறித்து விசாரனை செய்து வரும் போலீசார் கொள்ளையர்கள் பயன்படுத்தியது உண்மையான துப்பாக்கியா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதையும் படிங்க: விஜய் கட்சி இன்னும் ரசிகர் மன்றம் தான்... தஞ்சையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம்!

ராஜமாணிக்கத்திடம் 15 பேர் பணி புரிந்து வருகிற நிலையில் அவர்களிடமும் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நகை கொல்லரிடம் நகை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க 9 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட போலீசார் விக்கிரவாண்டி மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளிலும் கடந்து சென்ற வாகனங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் ரயில் மூலம் தப்பிக்க கூடும் என்பதால் ரயில் நிலையத்திலும் சென்னை வரை இரண்டு தனிப்படைகள் சென்னைக்கு சென்றுள்ளன.

இதையும் படிங்க: ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்? EPS தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..! முக்கிய ஆலோசனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share