×
 

ஒத்த உருண்டையில் மொத்த ஜோலியும் முடிச்சது... ஓடும் பேருந்தில் ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்...!

ஓடும் பேருந்தில் கடலை உருண்டையை கொடுத்து ஆசிரியை கழுத்தில் இருந்த 8 சவரன் நகையை களவாடி சென்ற பெண்!. மயங்கிய நிலையில் ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த சாரதா (57) என்பவர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள தனது மகளை சந்தித்து விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். 

சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் வரை செல்லும் பேருந்தில் பயணித்த போது அரூர் அருகே அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கடலை உருண்டை கொடுத்ததாக தெரிகிறது. 

அதனை சாப்பிட்ட பெண் ஆசிரியை சில நிமிடங்களில் மயங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  பின்னர் ஆசிரியை கழுத்தில் இருந்த தாலி சரடு சயின் ஆகிய 8 சவரன் நகை மற்றும் பணப்பையை மர்ம நபர் பறித்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: 9 வது நாளாக தொடரும் ஆபரேசன் அகல்.. வெடிக்கும் தோட்டா.. 2 வீரர்கள் வீர மரணம்..

 ஊத்தங்கரையில் இறங்க வேண்டிய பெண் ஆசிரியை திருப்பத்தூர் பேருந்து நிலையம் வரை மயங்கி நிலையில் பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் வந்தடைந்த நிலையில் பேருந்து நடத்தினர் இறங்குங்கம்மா வண்டி நின்னுடுச்சு என்று கூறியுள்ளார்.

 அப்போது மயக்கத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்த சக பயணிகள் உதவியோடு பெண் ஆசிரியை இறக்கி உள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. 

இது குறித்து அவரது கணவர் அன்பழகன் கூறுகையில் அருகில் இருந்த பெண் ஒருவர் எனது மனைவிக்கு ஏதோ சாப்பிட கொடுத்து நகையை பறித்து சென்றுள்ளார் என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சீனாவுக்கு வாங்க மோடி!! ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share