×
 

திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் 122 சவரன் நகை கொள்ளை..!! பரப்புரைக்கு சென்றபோது துணிகரம்..!!

திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் 122 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கடற்கரை ராஜ் தீவிரமான வாக்கு சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் முழு வேகத்தில் நடைபெறும் நிலையில், இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளரின் செயல்பாடுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. சாத்தூர் தொகுதியில் திமுக அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து, அவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் கடற்கரைராஜ் தொடர்ச்சியான பிரசாரப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சாத்தூர் தொகுதி திமுக வேட்பாளரான கடற்கரை ராஜ் வீட்டில் 122 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிக தீவிரமான வாக்கு சேகரிப்பில் கடற்கரை ராஜ் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது இந்த துணிகர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். கடற்கரை ராஜ் தனக்காக வாக்கு சேகரிக்க சென்ற போது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 122 சவரன் நகையை கொள்ளையடித்திருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக வேட்பாளரின் வீட்டிலேயே நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: திமுகவை விவசாயிகள் மன்னிக்கவே மாட்டாங்க..! அன்புமணி ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share