×
 

அமைச்சர் சேகர் பாபுவுக்கு செக் வைத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்... அறநிலையத்துறை தலையில் இறங்கியது இடி... வெளியானது அதிரடி அறிவிப்பு...!

கோயில்களில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்க இடைக்கால தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

இந்துசமய  அறநிலையத்துறை, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தரப்பில் பதிலளிக்க நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு. கோவில் நிதியில் கட்டப்பட்ட விடுதிகளை கோவில் அல்லாத மூன்றாம் நபர்கள் நிர்வகிக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார். 

 சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த எஸ்.விஜயநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சமீபத்தில் நண்பருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றோம். முன்னதாக அங்குள்ள ஓட்டல் ஆலயத்தில் அறை முன்பதிவு செய்தோம். ஓட்டல் ஆலயத்தில் தங்கியிருந்த போது தான் அது கோயில் நிதியில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி என்பதும், அந்த விடுதி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஓட்டல் ஆலயம் என்ற பெயரில் நடத்தப்படுவதும் தெரியவந்தது. கோயில் நிதியில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டுப்பாட்டில் வழங்கி ஓட்டல் ஆலயம் என்ற பெயரில் ஓட்டல் நடத்துவது சட்டவிரோதம்.

எனவே பக்தர்கள் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ஓட்டல் ஆலயம் என்ற பெயரில் நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்தும், திருச்செந்தூர், திருச்சிராப்பள்ளி ,ராமேஸ்வரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் நிதியில் கட்டப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் வழங்கப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதிகளை திரும்ப பெறவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இந்தியாவை துண்டாட களமிறங்கும் பாக்., பெண்கள்!! 5,000 தற்கொலைப்படை தயார்!! கொக்கரிக்கும் மசூத் அசார்!!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் வழங்க இடைக்கால தடை விதித்தும், மனு தொடர்பாக இந்துசமய  அறநிலையத்துறை, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: அமெரிக்கா வாங்கலாம்!! இந்தியா வாங்க கூடதா?! ட்ரம்புக்கு நெத்தியடி கேள்வி!! புடின் மாஸ் அண்ணாச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share