×
 

யார் இந்த பிஆர்.கவாய்? குடிசையில் பிறந்து இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!

நாட்டின் 52-வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாட்டின் 52-வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் பெளத்த மதத்தைப் பின்பற்றும் முதல் தலைமை நீதிபதி பிஆர்கவாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணனுக்குப்பின், தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த 2வது நபர் என்பதும் கவனிக்கத்தக்கது. 

6 மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவியில் இருக்கும் பிஆர் கவாய் நவம்பர் 23ம் தேதியுடன் ஓய்வு பெறுவார். 1950ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பின் இதுவரை எஸ்டி, எஸ்சி பிரிவில் இருந்து 7 நீதிபதிகள் மட்டுமே வந்துள்ளனர். அதில் 2 பேர் தலைமை நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி.க்கள் மீது ஏன் நடவடிக்கையில்லை..? காங்கிரஸ் கேள்வி..!

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று எளிமையாக நடந்த பதவி ஏற்பு விழாவில் குடியரசுத் தலைவர் தெளரபதி முர்மு, தலைமை நீதிபதி கவாய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா, ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அர்ஜூன் ராம்மேக்வால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, குடியுரசு துணைத் தலைவர் வி.வி.தனகர், குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

தலைமை நீதிபதி பிஆர் கவாய் பற்றிய சுவரஸ்யங்கள்;

1.    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமராவதி நகராட்சியில் 1960ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி குடிசைப்பகுதியில் பிறந்தவர் பிஆர் கவாய்

2.    1985ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பார்கவுன்சிலில் பிஆர் கவாய் சேர்ந்து, 1990வரை தனியாகப் பயிற்சி எடுத்தார். 1990க்குப்பின் மும்பை உயர் நீதிம்றத்தின் நாக்பூர் அமர்வில் பிஆர் கவாய் பயிற்சி எடுத்தார்.

3.     அரசியலமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம் ஆகியவற்றில் பயிற்சி எடுத்த கவாய், அமராவதி பல்கலைக்கழகம், அமராவதி நகராட்சி, நாக்பூர் நகராட்சி அரசு வழக்கறிஞராக கவாய் இருந்தார்.

4.    சிகாம், சிசிவிஎல் உள்ளிட்ட அரசு தன்னாட்சி அமைப்புகள், நகராட்சி கவுன்சில்களுக்க விதர்பா மண்டலத்தில் வழக்கறிஞராக பிஆர் கவாய் இருந்தார்.

5.    மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் அமர்வில் 1992 ஆகஸ்ட் முதல் 1993 ஜூலை வரை அரசு துணை வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் கவாய் இருந்தார்.

6.    2000ம் ஆண்டு ஜனவரி 17ல் அரசு வழக்கறிஞராகவும், 2003ம் ஆண்டு நவம்பர் 14ல் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றார்.

7.    2005, நவம்பர் 12ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பிஆர் கவாய் நிரந்தரமாக்கப்பட்டார்.

8.    மும்பை உயர் நீதிமன்றத்தில் அனைத்து விதமான அமர்வுகளிலும் பிஆர் கவாய் பணியாற்றினார், குறிப்பாக நாக்பூர் அமர்வு, அவுரங்காபாத் அமர்வு, பனாஜி அமர்விலும் கவாய் பணியாற்றினார்.

9.    2019ம் ஆண்டு, மே 24ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிஆர் கவாய் பதவி உயர்வு பெற்றார்.

10.    கடந்த 6 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் 700வகைான அமர்வுகளில் பணியாற்றிய கவாய், அரசியலமைப்புச்சட்டம், நிர்வாகச் சட்டம், சிவில், கிரிமினல், வர்த்தக முரண்பாடு, மின்சட்டம், கல்விச்சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் உள்ளிட்டவைகளில் பணியாற்றியுள்ளார்.

11.    52-வது தலைமை நீதிபதியாக பதவிஏற்றுள்ள பிஆர் கவாய் 194 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் நீடிப்பார், நவம்பர் 23ம் தேதி ஓய்வு பெறுவார். இந்த 194 நாட்களில் 101 நாட்கள் உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை வந்துவிடும் ஆக 93 நாட்கள் மட்டுமே கவாய் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.

12.    அமராவதி நகராட்சியில் சாதாரண குடிசைப்பகுதியல் பிறந்து வளர்ந்து ஏழ்மையுடன் படித்து, தலைமை நீதிபதியாக கவாய் உயர்ந்துள்ளார். சட்டமேதை பிஆர் அம்பேத்கர் பெளத்த மதத்தை தழுவியதுபோல், பிஆர் கவாய் குடும்பத்தாரும் பெளத்த மத்துக்கு மாறியுள்ளார். 

இதையும் படிங்க: 21 நீதிபதிகளின் சொத்துக்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.. ரூ.120 கோடி வைத்துள்ள நீதிபதி யார்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share