மாநில உரிமைகளுக்கான மைல்கல்! முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி குரியன் ஜோசப் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!
மத்திய மாநில உறவுகளில் புதிய திருப்பம் குறித்த நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு.
மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, தனது இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (பிப்ரவரி 16, 2026) சமர்ப்பித்தது.
இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் உறவுகளை மேம்படுத்தவும் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, தனது விரிவான அறிக்கையை இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான இந்தக் குழு, கடந்த சில மாதங்களாக மாநில சுயாட்சி, நிதிப் பங்கீடு மற்றும் ஆளுநரின் அதிகார வரம்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆழ்ந்த ஆய்வு மேற்கொண்டு இந்த ரிப்போர்ட் டைத் தயாரித்துள்ளது. இந்த நிகழ்வின் போது அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்! 77-ஆவது குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய முக்கியப் பிரமுகர்கள்.
மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இந்தக் குழுவின் பரிந்துரைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கல்வி, சுகாதாரம் மற்றும் வரி வருவாய் பகிர்வு போன்ற கன்கரண்ட் லிஸ்ட் விவகாரங்களில் மாநிலங்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல முக்கிய ஆலோசனைகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் இந்தப் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து, அடுத்தகட்டமாக மத்திய அரசுக்குத் தனது நிலைப்பாட்டை ஸ்ட்ராங் ஆகத் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்.