×
 

உண்ட வீட்டுக்கே ரெண்டகம்! கடம்பூர் ராஜு பகிரங்கம் மன்னிப்பு கேட்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!

ஜெயலலிதாவை விமர்சிப்பது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போன்றது என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், பாஜகவை புகழ்வதாக நினைத்து ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்ததால் கடும் சர்ச்சை நிலவியது.

பாஜக கூட்டணி முறிவு என்ற வரலாற்றுப் பிழையை செய்து விட்டோம் என்றும் 1998 இல் பாஜக ஆட்சியை கவிழ்க்க ஜெயலலிதா எடுத்த முடிவு வரலாற்றுப் பிழை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதால் சர்ச்சை எழுந்தது.

ஜெயலலிதாவின் முடிவையே விமர்சிக்கும் அளவிற்கு கடம்பூர் ராஜு வளர்ந்து விட்டாரா என்றும் வளர்த்தக்கிடா மார்பில் பாய்ந்ததாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: தனிக்கட்சி... தவெகவுடன் கூட்டணி... ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்!

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவை நான் ஒருபோதும் வரலாற்று பிழை என பேசவில்லை என கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என்ற பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் தந்தார். கடந்த 1999 இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது திமுக ஆட்சி அமைத்ததை தான் கூறினேன் என்றும் தான் கூறிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு திரித்து வெளியிடப்பட்டதாக கடம்பூர் ராஜு விளக்கமளித்தார். 

இந்த நிலையில் கடம்பூர் ராஜு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். ஜெயலலிதா முடிவை விமர்சித்த கடம்பூர் ராஜுவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த ஓபிஎஸ் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மோடியா லேடியா என சவால் விட்டு வென்றவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று கூறிய அவர், ஜெயலலிதாவை குறை சொல்வது உண்டு வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போன்றது என விமர்சித்தார். ஏற்றிவிட்டு ஏனைய எட்டி உதைப்பது மிகப்பெரிய துரோகம் என்பதை உணர்ந்து கடம்பூர் ராஜு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கு கூறினார்.

இதையும் படிங்க: சூடுபிடித்த அரசியல் களம்..! ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்.. விஜயுடன் பேச்சுவார்த்தை..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share