×
 

எல்லாமே DRAMA... வன்னியர்கள் வயித்துல அடிச்சத பத்தி ஏன் பேசல? காடுவெட்டி குரு மகள் தரப்பு குற்றச்சாட்டு

அன்புமணியும் ராமதாஸும் அரசியல் நாடகம் போடுவதாக காடுவெட்டி குரு மகள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் இருந்து தொடங்கிய அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையிலான பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. தந்தையும் மகனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். தனித்தனியாக கட்சிக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அன்புமணி மீது தற்போது பதினாறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் தரப்பும் முன் வைத்து அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மிகப்பெரிய பிரச்சினையாக சென்று கொண்டிருக்கிறது., என்ன செய்வது என தொண்டர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருவரும் அரசியல் நாடகம் நடத்துவதாக ஏற்கனவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே, காடுவெட்டி குரு மகள் தரப்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ராமதாஸ் தனது மகளையும், அன்புமணி தனது மனைவியையும் அரசியலுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறினர். வன்னியர் சமூகத்திற்கு அன்புமணியும், ராமதாஸும் எதையும் செய்யவில்லை. வன்னியர் சமூகத்திற்காக பலர் சொத்துகள், நிதி கொடுத்துள்ளனர். அவை என்ன ஆனது என்று கேட்டனர்.

அவை பற்றி எதுவும் பேசவில்லையே என்றும் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள்., ஆனால் அவர் செய்த ஊழலை பற்றி ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினர். ராமதாஸும் அன்புமணியும் அரசியல் நாடகமாடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். காடுவெட்டி குருவை அரசியலுக்காக பயன்படுத்துவதாகவும், வன்னியர்கள் வயிற்றில் அடிப்பதை பற்றி இருவரும் பேச மறுப்பதாகவும் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள்! விளக்கம் தரலனா... ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை..!

ஒரு முடிவு எடுத்துவிட்டு வெளியில் வந்து சொல்ல வேண்டும் அல்லது முடிவெடுத்து விட்டால் அன்புமணியை நீக்க வேண்டும்., அது இல்லாமல் பொதுவெளியில் சண்டையிடுவது போல நாடகம் நடத்துவதாக குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு இதுவே வழி.. அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்த அன்புமணி ஐடியா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share