×
 

#BREAKING கோழிக்கு வைத்த குறி... தலையில் குண்டு பாய்ந்து இளைஞர் துடிதுடித்து பலி... கள்ளக்குறிச்சியில் பயங்கரம்...!

கள்ளக்குறிச்சியில் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கொட்டப்புத்தூர் கிராமத்தில் தலையில் துப்பாக்கி கொண்டு பாய்ந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் வினோதமான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கொட்டபுப்புத்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மேல்மதூர் என்ற  கிராமத்தைச் சேர்ந்த பிச்சன் மகன் பிரகாஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட கரியாலூர் காவல் நிலைய போலீசார் உடல் கூற ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் முதல் கட்டமாக சந்தேகத்தின் பெயரில் மூன்று பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். 

இந்த நிலையில ஆண்டி மகன் தங்கராசு என்பவர் நேற்று இரவு அவருடைய மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக அவர் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து கோழி ஒன்றை சுட்டதாகவும், அப்போது குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேபோல பிரகாசை கொலை செய்யும் நோக்கத்தோடு தங்கராசு துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்றும் ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share