×
 

விஜய்க்கு எதிராக களம் இறங்கும் கமல்!! ஸ்கெட்ச் ரெடி! திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பிரசார வேகம் அதிகரித்துள்ளது. இதில் மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம.) தலைவர் கமல்ஹாசன், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இந்தத் தேர்தலில் ம.நீ.ம. தனியாகப் போட்டியிடவில்லை. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை கமல்ஹாசன் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தார். இப்போது அவர் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் இறங்குகிறார். ஏப்ரல் 20 வரை 26 தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான விரிவான அட்டவணை ம.நீ.ம. சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அட்டவணையின்படி, ஏப்ரல் 17ஆம் தேதி துறைமுகம், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளிலும், ஏப்ரல் 18ஆம் தேதி தி.நகர், மயிலாப்பூர், சேப்பாக்கம், வேளச்சேரி தொகுதிகளிலும், ஏப்ரல் 19ஆம் தேதி அவிநாசி, கோவை தெற்கு தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார். ஏப்ரல் 20ஆம் தேதி திருச்சி கிழக்கு, திருவரங்கம், லால்குடி தொகுதிகளில் கமல் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதையும் படிங்க: என்ன ஆச்சு? Vijay Health Issue!! அடிக்கடி சோர்வடையும் விஜய்? அடுத்தடுத்து ரத்தாகும் பிரசாரம்?!

குறிப்பாக, த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் செய்யவுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் விஜய் நேரடியாகப் போட்டியிடும் நிலையில், கமலின் வருகை கூட்டணியின் வலிமையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் சூழலில் மாநிலம் முழுவதும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ம.நீ.ம. போட்டியிடாததால், கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் பல தொகுதிகளில் மக்களைச் சந்தித்து பேச உள்ளார். இந்த பிரசார அட்டவணை வெளியானதால், தி.மு.க. வட்டாரங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது.

கமல்ஹாசனின் இந்த நடவடிக்கை, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் அவரது பிரசாரம் கூட்டணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் Vs கனிமொழி!! இரண்டாக பிரியும் திமுக?! கொளுத்திப்போட்ட அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share