×
 

திமுகவுடன் சீட் Negotiation இல்ல.. எனக்காக அவங்க பண்ணுவாங்க... கமல் பளீச் பதில்..!!

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் பதில் அளித்தார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இப்போது முழு வீச்சில் நடைபெறத் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகள் பெரும்பாலும் உறுதியாகிவிட்ட நிலையில், தொகுதிகளை எப்படிப் பிரிப்பது என்பதுதான் இப்போதைய முக்கிய விவாதமாக இருக்கிறது.

திமுக இதற்காக சமீபத்தில் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவை கட்சியின் பொருளாளரும் மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு தலைமை தாங்குகிறார். குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வி.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எம்பிக்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஏழு பேர் கொண்ட குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடுகளை இறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. ஏற்கெனவே திமுக தலைமை, பிப்ரவரி 22-ம் தேதி முதல் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அறிவித்திருந்தது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் உறுதியாக இணைந்துள்ளன. 

இதையும் படிங்க: #BREAKING தொகுதி பங்கீடு... திமுகவில் திடீர் மனமாற்றம்...விடிந்ததுமே அறிவாலயம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

இந்த நிலையில், திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, திமுகவுடன் சீட் Negotiation இல்லை என்றும் எனக்காக அவர்கள் செய்வார்கள் என்றும் தெரிவித்தார். இறுதி செய்துவிட்டு அறிவிப்போம் எனவும் தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார். தங்கள் கூட்டணியை பொறுத்தவரை ஒற்றுமை மற்றும் சிந்தனை வலுவாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். ஓபிஎஸ் வருகை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அனைவரும் வருக தமிழகம் வெல்க என்று பதிலளித்து சென்றார். 

இதையும் படிங்க: தேர்தலில் தானும் போட்டி..!! விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா திட்டவட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share