×
 

"மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

சட்டசபையில் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் சௌமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் தருமபுரி தொகுதி உறுப்பினருமான சௌமியா அன்புமணி அவர்கள் ஆற்றும் உரைகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் துல்லியமான தரவுகளுடன் ஆக்கப்பூர்வமாக எடுத்துரைத்து, அவைக்குக் கிடைக்கும் குறுகிய நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வரும் அவரது செயல்பாடு பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சௌமியா அன்புமணியை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சட்டமன்றத்தில் தனக்கு ஒதுக்கப்படும் நேரத்தை மிகச் சரியாகவும் துல்லியமான தகவல்களுடனும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தி வரும் சகோதரி சௌமியா அன்புமணி அவர்களைப் பாராட்டுவதாகக் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பாராட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

சௌமியா அன்புமணி சட்டமன்றத்தில் பேசும்போது காகிதத்தில் எழுதி வைத்த உரையைப் படிப்பதற்குப் பதிலாக, நேரடியாகத் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் முன்வைத்துப் பேசுவது அவரது தனித்தன்மையாகக் கருதப்படுகிறது. பெண்கள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மதுவிலக்கு, விவசாயிகள் பிரச்சினைகள் போன்ற முக்கிய விஷயங்களை அவர் தொடர்ந்து எழுப்பி வருகிறார்.சமீபத்தில் மகளிர், மதுவிலக்கு மற்றும் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அவர் ஆற்றிய உரை பலரையும் கவர்ந்தது.

இதையும் படிங்க: அனிதா நினைவு தினம்..!! "BAN NEET"..! கருப்பு T shirt- ல் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி..!!

பண்டிகை காலங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ஒருநாள் விடுமுறையாவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார். அதேபோல் மதுவினால் குடும்பங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதையும், குழந்தைகளின் கல்வி மற்றும் பெண்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதையும் தரவுகளுடன் விளக்கினார். முழுமையான மதுவிலக்கைக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த உரை அவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

இதையும் படிங்க: வினாக்கள் - விடைகள் நேரம்..! விறுவிறுப்பாக சட்டப்பேரவை தொடக்கம்..! அமைச்சர்கள் பதிலுரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share