×
 

"வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக MP கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் ஒரு பெரிய பரபரப்பு உருவாகிய நிகழ்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4, 2026 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அதே நாளில் விடுதலை செய்யப்பட்டார்.ஆகஸ்ட் 3 அன்று தஞ்சாவூரில் திமுக சார்பில் காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை திட்டம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் நடிகை த்ரிஷாவின் பெயரை கோஷமிட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய வார்த்தைகள் இரட்டை அர்த்தம் கொண்டவை என்றும், நடிகையின் மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருந்தன என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த உரை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரை இணைத்துப் பார்க்கும் வகையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிர் அணி அலுவலர் பைரவி சங்கர் என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறை உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய நீதித் தொகுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. பெண்ணின் மானத்திற்கு பங்கம் விளைவித்தல், பொது இடத்தில் ஆபாச வார்த்தைகள் பேசுதல், பகைமையைத் தூண்டுதல், கலவரத்தைத் தூண்டுதல், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளும், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டன.

ஆகஸ்ட் 4 அன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்கு தஞ்சாவூர் காவல்துறையினர் சென்றனர். அவரது மனைவி கீர்த்திகா மற்றும் திமுக தலைவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். இல்லத்தின் முன் திமுக தொண்டர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றி தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். சென்னையில் இருந்து தஞ்சாவூர் வரை சுமார் ஏழு மணி நேரம் பயணம் நீடித்தது.இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், காவல்துறை உதயநிதி ஸ்டாலினை நீதிமன்றக் காவலில் வைக்கும் எண்ணம் இல்லை என்றும், விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதே நாளில் விசாரணை முடித்து காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று இரவு உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ப்ளிஸ்..!! "கோமாளி" அரசிடம் இருந்து உதயநிதியை காப்பாத்துங்க.! அப்பாவு விமர்சனம்..!!

இந்த நிலையில், ஆபாசமாக பேசுவதையும், இரட்டை அர்த்தத்துடன் பேசுவதையும், கீழ்த்தரமான நகைச்சுவைகளை பொதுவெளியில் செய்வதையும் எந்த ஒரு நாகரிகமான சமூகமும் ஏற்காது என பாஜக எம்பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்திற்காக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு வெளியே வந்திருக்கலாம் என்றும் ஆனால், இது ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திமுகவின் ரவுடியிசம்"..! பொதுமக்களை தாக்குவதா.? கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share