குற்றங்களை தடுக்காமல் பண்பட்ட சமூகம்- னு சொல்ல முடியாது... கோவை மாணவிக்கு குரல் கொடுத்த கனிமொழி எம்.பி...!
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு துணை நிற்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, 3 இளைஞர்கள் அவரை தாக்கி, மாணவியை வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அடித்து விரட்டப்பட்ட நிலையில், ஆண் நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பீளமேடு போலீசார் மாணவியை மீட்டனர்.
மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓடிய மூவரை பீளமேடு காவல்துறை இடத்தில் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தப்பியோடிய 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்தன. சம்பவம் நடந்த இடத்தில் காரில் இருந்து துப்பட்டா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் தடையவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குணா, சதீஷ், கார்த்திக் ஆகிய 3 பேர் போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர். கோவையில் கல்லூரி மாணவி சமூகவிரோதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொடுமை...! எந்த கொடுஞ்செல்லும் போதாது... கூட்டு பாலியல் வன்முறை சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்...!
குற்றவாளிகளை உடனடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது என்றும் இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் எனவும் தெரிவித்தார். இனியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யாமல் நாம் பண்பட்ட சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது பாலியல் மாடல் ஆட்சி… வாயை திறங்க ஸ்டாலின்..! வாட்டி எடுத்த நயினார் நாகேந்திரன்…!