காங்கிரஸ் பொறுப்பா நடக்கணும்..! காவிரி நீர் பிரச்சனை..! கனிமொழி கண்டனம்..!!
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அமைச்சரின் கருத்தை கனிமொழி எதிர்த்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக நிலவும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில், கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அண்மையில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைப்பொழிவு குறைவு காரணமாக அணைகள் நிரம்பாததால் தமிழ்நாட்டுக்கு நீர் தர இயலாது என அவர் தெரிவித்திருப்பது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் ஏற்கெனவே வெளியிட்ட உத்தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி (TMC) நீரையும், ஜூலை மாதத்தில் 32 டிஎம்சி நீரையும் கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.
இந்த உத்தரவு இரு மாநிலங்களுக்கும் இடையேயான நீர் பங்கீட்டு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், கர்நாடக அமைச்சரின் அறிக்கை இந்த உத்தரவுகளுக்கு முரண்பாடாகக் கருதப்படுகிறது.ராமலிங்க ரெட்டி தனது பேட்டியில், கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் குறைவாக உள்ளதாகவும், மாநிலத்தின் குடிநீர் தேவை உள்ளிட்ட சொந்தத் தேவைகளை முதன்மைப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் விளக்கினார். மேலும், நீர் வெளியீடு குறித்த இறுதி முடிவை காவிரி நீர் மேலாண்மை ஆணையமே எடுக்கும் எனவும், அதுவும் கர்நாடகாவின் நீர் இருப்பு மற்றும் குடிநீர் தேவையைப் பொறுத்தே இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலைப்பாடு தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் நீர் தேவையை புறக்கணிப்பதாகப் பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் காவிரி நீர் தமிழக விவசாயத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஜூன்-ஜூலை மாதங்களில் சம்பா மற்றும் குருவை பயிர்களுக்கு நீர் தேவை அதிகம் உள்ள நேரத்தில் இந்த மறுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விவசாய சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன. இதற்கு திமுக MP கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!
ஜூன் மாதம் 9.91 டி.எம்.சியும், ஜூலை மாதத்தில் 32 டி.எம்.சியும் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா நீர்பாசனத்துறை அமைச்சர் கூறியிருப்பதை ஏற்கமுடியாது என்று கூறினார். குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், தவெக அரசும், அவர்களுடன் அமைச்சரையில் பங்குக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டைப் பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் நாட்டுக்கும் வாஷிங்மிஷின் வந்துடுச்சாமே..? அப்படியா..? கலாய்த்த கனிமொழி..!